சென்னையில் கருப்பு திமிங்கலம்.. வேற லெவல் மழை.. வெதர்மேன் பகிர்ந்த வீடியோ பாருங்க
சென்னையில் அடுத்த ரவுண்டை ஆரம்பித்துள்ளது மழை.. மழைக்கான மேகக்கூட்டங்கள் வங்கக்கடலில் இருந்து நகர்ந்து வந்து கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கொட்டி வருகிறது. நீலாங்கரை, பெருங்குடி, தரமணி, வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், கீழ்கட்டளை, மேடவாக்கம், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், காரப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. அது தொடர்ந்து வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதுவை, வடதமிழகம் நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திர கடற்கரை அருகில் நிலை கொள்ளும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார். இதுபற்றி அவர் கூறும் போது, டெல்டா மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் கூறியிருந்தார்.
இதேபோல் வட கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், ஒருசில இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்றும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மிக கனமழையும், அதனை ஒட்டியுள்ள திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் பாலச்சந்திரன் கூறியிருந்தார்.
Vera level rains here even with my egg eye balls i can't see.
— Tamil Nadu Weatherman (@praddy06) October 15, 2024
Perungudi streets are having water stagnation pic.twitter.com/vfp8Hty6XF
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின்படியே நேற்று இரவு 9 மணி தொடங்கி மழை ஆரம்பித்தது. மழை இரவு முழுவதும் பரவலாக பெய்தது. காலை வரை விட்டு விட்டு பெய்து வந்தது. காலை 6மணிக்கு மழை முற்றாக விலகியது. ஆனால் காலை 8 மணிக்கு மேல் மழை மீண்டும் மெதுவாக ஆரம்பித்தது. 9.30 மணி அளவில் எல்லாம் பல இடங்களில் கனமழை பெய்ய தொடங்கியது. 10.30 மணி அளவில் சென்னை மொத்தத்தையும் மழை மேகங்கள் சூழ்ந்தன. தற்போது இடிமின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. அதிகப்படியான மேகக்கூட்டங்கள் கடந்து வருவதால் மழை தொடர்ந்தபடியே உள்ளது. இடி மின்னல் மிக அதிகமாக இருப்பதால் மக்கள் கவனமாக இருப்பது நல்லது. இதனிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் பெருங்குடி பகுதியில் பெய்து வரும் கனமழை தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் நான் கண் திறந்து பார்க்க முடியாத அளவிற்கு மழை பெய்கிறது. பெருங்குடி சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது என்று கூறியுள்ளார்.
அந்த வீடியோவில் சாலை முழுக்க தண்ணீராக காணப்படுகிறது. கருமேகங்கள் மொத்தமாக சூழ்ந்து சாலையே தெரியாத அளவிற்கு மழைபெய்து வருகிறது. அங்குமட்டுமல்ல, அதனை சுற்றியுள்ள திருவான்மியூர்,அடையாறு, நீலாங்கரை, பெருங்குடி, தரமணி, வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், கீழ்கட்டளை, மேடவாக்கம், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், காரப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications