புயல் இருக்கு.. சென்னை பாதிக்கப்படுமா? வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
சென்னை: இந்த மாத இறுதியில் புயல் உருவாக கூடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார். இந்த புயலால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள் பாதிக்கப்படுமா? என்பது குறித்து எழுந்த கேள்விகளுக்கும் அவர் விளக்கமளித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் கடந்த அக்.1ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இன்று வரை தமிழகத்தில் சராசரியாக 284.8 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இந்த காலத்தில் 302.1 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்க வேண்டும். அந்த வகையில் மழை இயல்பை விட 6% குறைவாகவே பெய்திருக்கிறது.

இந்நிலையில் அடுத்தடுத்த நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "கிழக்கு அலை தாக்கத்தால், இன்று கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும். நேற்று மிதமான மழை டெல்டா மாவட்டங்களில் பதிவாகியிருக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை பொறுத்தவரை லேசான மழை பதிவாகியிருக்கிறது.
அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மிதமான மழையை எதிர்பார்க்கலாம். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் என டெல்டா மாவட்டங்களில் நேற்றைவிட அதிகமான மழை இன்று பெய்யும். டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் காற்று குவிதல் இருப்பதால் மழையின் தாக்கமும் அதிகமாக இருக்கும்.
தேனி, மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கரூர், நாமக்கல், நீலகிரி, ஈரோடு, சேலம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.
கனமழை எச்சரிக்கை
மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் என டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். அதேபோல தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசியில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இன்று அதிக கனமழை அல்லது மிக தீவிர கனமழைக்கான எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
புயல் எச்சரிக்கை
வங்கக்கடலில் புயல் உருவாகி, அது நகர்ந்தால்தான் எந்த திசையில் அது பயணிக்கிறது என்பது தெரிய வரும். எனவே நவ.29 வரை நாம் காத்திருக்க வேண்டும். இன்றும் கொஞ்சம் நாட்கள் நமக்கு தேவை. புயல் வலுவானதாக இருந்தால் அது சென்னையில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஒரு சொட்டு மழை கூட பெய்யாது. அதுவே, பலவீனமான புயல் எனில் சென்னையில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
-
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
அரசியல் என்ட்ரி? திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா ராகவா லாரன்ஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications