புல் எபெக்ட்.. இங்கே செஞ்சுரி.. அங்கே டபுள் செஞ்சுரி.. எங்கெல்லாம் மழை பெய்யும்? வெதர்மேன் வார்னிங்
சென்னை: சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பெய்து வரும் மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான கணிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
சென்னையிலும், தென் தமிழ்நாட்டிலும் கனமழை பெய்து வரும் நிலையில் அவர் வெளியிட்டுள்ள கணிப்பில், தென் தமிழ்நாடு மற்றும் மேற்கு தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய பகுதிகளுக்கு சிறந்த நாட்களாகும் இவை. தெற்கில் மழை இரட்டை சதம் அடித்துள்ளது, மேற்கில் சதம், மேற்கில் ஒரு டிரிபிள் சதம் அடித்துள்ளது. இந்த ஆண்டு பருவமழையின் இது சிறந்த நாளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தென் மற்றும் மேற்கு தமிழக மாவட்டங்களில் எங்கும் தண்ணீர் தண்ணீர் தண்ணீர் மட்டும்தான்.
அடித்து ஆடும் மழை: புல் எபெக்ட் காரணமாக அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னையில் தொடர் மழை நீடிக்கும். குன்னூர் - கோத்தகிரி பெல்ட் மழை காரணமாக அடித்து நொறுக்கப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து கேரளாவின் அரபிக்கடலுக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நகரும் போதெல்லாம் இந்த பகுதி மழையால் அடித்து நொறுக்கப்படுவதுவழக்கம் .. இங்கும் அது நடந்துள்ளது.
இன்று மேற்குத் தமிழ் நாட்டில் மழை சற்று குறையும், மேற்குத் தமிழ்நாடு & தெற்குத் தமிழ் நாட்டு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவை கவனித்து பார்க்கப்பட வேண்டிய பகுதிகள் ஆகும். சென்னை மற்றும் காஞ்சிபுரம்,,திருவள்ளூர், செங்கல்பட்டிற்கு புல் எபெக்ட் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.,
மேட்டுப்பாளையத்தில் 373 மி.மீ. பெய்துள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் - குன்னூர் - கோத்தகிரி சாலை கடுமையாக பாதிக்கப்படும். பருவமழையின் 1வது மூன்று செஞ்சுரி இதுதான். .வளிமண்டல சுழற்சி இப்போது வங்காள விரிகுடாவில் இருந்து அரபிக்கடலுக்கு நகர்கிறது. இந்தப் பகுதியில் எப்பொழுதும் இந்த மாதிரி மழை பெய்வது வழக்கம்தான் , என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டு உள்ளார்.
சக்கரம் வருது; முன்னதாக அவர் செய்த போஸ்டில், மழை பெய்யாத மோசமான அக்டோபர் மாதத்திற்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு மிகையான மழையை நவம்பர் மாதம் கொண்டு வர உள்ளது.
தமிழ்நாட்டில் நிறைய மழை நாட்கள் இந்த நவம்பர் மாதங்களில் வர உள்ளது. வானிலையில் இது செம்ம பவுன்ஸ் பேக் ஆகும். தென் தமிழ்நாட்டில் உள்ள அணைகளும் நிரம்பி வருகின்றன. அதேபோல் நவம்பரில் கடைசி வாரம் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் சக்கரம் வர கூட வாய்ப்பு உள்ளது. அந்த சக்கரம் எந்த பக்கம் நோக்கி செல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை மைய எச்சரிக்கை; 23.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பெய்யும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications