தமிழகத்தில் 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் குளுகுளு அப்டேட்
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் காலை 10 மணிவரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணிவரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பொதுமக்கள் சமவெளிப் பகுதியில் இருந்து குளுகுளுவென இருக்கும் மலைப் பகுதிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். கோடை விடுமுறையையொட்டி நீலகிரி போன்ற பகுதிகளுக்கு மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் சார்பில் நீலகிரியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு, சேலம், ராமநாதபுரம், தருமபுரி ஆகிய பகுதிகளில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வானிலை ஆய்வு மையத்தில் இந்த அறிவிப்பு சிறிது நிம்மதியை ஏப்படுத்தியுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய வடதமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 96.8-98.6 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84.2 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications