அண்ணா நகரில் பிச்சி பெடல் எடுத்த மழை.. சென்னையில் இன்று ஹாட்ஸ்பாட் எது தெரியுமா? வெதர்மேன் போஸ்ட்
சென்னை: சென்னையில் இன்று இரவும் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது: நேற்றைய தினம் சென்னை முழுக்க கனமழை பெய்தது. அது போல் தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் இந்த மழை பெய்தது. அண்ணா நகரில் பிச்சி பெடல் எடுத்தது. சென்னை விமான நிலையத்தில் இதுவரை பெய்த தென்மேற்கு பருவமழையின் அளவை நேற்று பெய்த மழை முறியடித்துவிட்டது.

தென்மேற்கு பருவமழை காலத்தில் மீனம்பாக்கத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை பல்வேறு காலகட்டங்களில் பெய்த மழையின் அளவுகளை பார்ப்போம். 1996ஆம் ஆண்டு 871 மி.மீ., 2023 ஆம் ஆண்டு 861 மி.மீ. இதுதான் மேற்கண்ட காலத்தில் 2ஆவது அதிக மழை அளவு. அது போல் 1995 ஆம் ஆண்டு 782 மி.மீ., 1967 ஆம் ஆண்டு 723 மி.மீ., 1985 ஆம் ஆண்டு 720 மி.மீ., 1961 ஆம் ஆண்டு 714 மி.மீ. மழை பெய்தது.
நேற்றைய தினம் அண்ணாநகரில் 50 மி.மீ. மழை பெய்தது. காஞ்சிபுரத்தில் மேகக் கூட்டங்கள் நகர்ந்து நல்ல மழையை கொடுத்தது. சென்னையில் முதல் நாள் மழை பெய்யாத தென் சென்னையில் நேற்று மழை பெய்தது. தொடர்ந்து 3 நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று 4ஆவது நாளாக மழை பெய்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் நள்ளிரவு முதல் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி முதல் சென்னை வரை வடதமிழகத்திற்கு நல்லதொரு நாள். இது முடிவல்ல, இன்று இரவும் கிருஷ்ணகிரி முதல் சென்னை வரை மற்றும் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். தென் சென்னை காட்டில் நல்ல மழைதான் என தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்தால் சாத்தனூர் அணையில் முழு கொள்ளளவை எட்டும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி ஏரி அதன் கொள்ளளவை எட்டும். அது போல் கிருஷ்ணகிரி அணையும் நிரம்பிவிட்டது. வேலூரில் உள்ள மோர்தானா அணையும் ஃபுல்லாகிவிட்டது. தென் சென்னையில் சோழிங்கநல்லூரில் 60 மி.மீ மழை பெய்துள்ளது. இன்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.
1996 ஆம் ஆண்டு மீனம்பாக்கத்தில் பெய்த தென்மேற்கு பருவமழையை விட இந்த ஆண்டு அதிக மழை பெய்துள்ளது. இவ்வாறு தனது போஸ்ட்டில் வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த சில தினங்களாக மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக அதிக மழை பெய்து வருகிறது. காலையில் வெயில் கொளுத்தி வருகிறது. மாலை வேளைகளில் மழை பிச்சு உதறுகிறது.


Click it and Unblock the Notifications
