சென்னையை சுற்றி சிவப்பு தக்காளி! டமால் டுமீல் மழை! இதை கேட்டு எவ்ளோ நாளாச்சு! வெதர்மேன் அப்டேட்
சென்னை: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் டமால் டுமீல் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டமால் டுமீல் மழை இன்று முதல் தொடங்கும். இந்த மாவட்டங்களுக்கு இது சிவப்பு தக்காளி சீசன் என சொல்லலாம்.

நிலத்தில் இருந்து கடற்கரையை நோக்கி காற்று வீசி வருகிறது. எனவே இன்று மாலையோ அல்லது இரவு முதலோ சென்னையின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். கடற்கரையிலிருந்து காற்று நகர்ந்து வருவதை பார்க்க முடிகிறது, நகரி மலை அருகே காற்று உருவாகி வருகிறது என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் காலை முதலே சென்னையில் வெயில் இருந்த நிலையில் தற்போது மாலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. காற்றின் வேகமும் அதிகமாக இருக்கிறது. இதனால் கனமழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2ஆம் தேதியும் தென் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதலே வெயில் வாட்டி வதைத்தது, மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய போதிலும் வெயில் அதிகரித்து பிறகு ஆலங்கட்டி மழை, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தமிழகம் நோக்கி வந்த குளிர்ந்த காற்று உள்ளிட்டவைகளால் மழை பெய்தது.
குறிப்பாக சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், வேலூர், திருத்தணி போன்ற பகுதிகளில் கடும் வெப்பம் நிலவியது. வேலூரில் மே மாதத்தில் பதிவான வெப்ப அளவுகளில் 7ஆவது அதிகபட்ச அளவு வெப்பம் பதிவானது. இரவு நேரங்களில் வீடுகளில் கடும் புழுக்கம் நிலவியது.
வேலூரில் மே மாதத்தில் பதிவான வெப்ப அளவுகளில் 7-வது அதிகபட்ச அளவு வெப்பம் பதிவானது. இரவு நேரங்களில் வீடுகளில் கடும் புழுக்கம் நிலவியது. இதனிடையே தென்மேற்கு பருவமழை கடந்த மே 30-ம் தேதி தொடங்கிய நிலையில், வட தமிழக மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. கடந்த 3 நாட்களாக வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஜூன் 2-ம் தேதி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 10 செமீ, கடலூர் மாவட்டம் தொழுதூரில் 8 செமீ, 3-ம் தேதி அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 10 செமீ, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. இதனால் 15 இடங்களுக்கு மேல் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் பதிவான நிலையில், திங்கள்கிழமை ஒரு இடத்திலும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகவில்லை.
திங்கள்கிழமை மாலை 5.30 மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 98 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் 97 டிகிரி, வேலூரில் 93 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்த நிலையில் இன்று செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications