"உருவாகுது சக்கரம்!" வானிலையில் அடுத்து நடக்கும் மாற்றம்! எங்கெல்லாம் மழை? அலர்ட் தரும் வெதர்மேன்
வெதர்மேன்: இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "டிசம்பர் முதல் வாரம் சக்கரம் உருவாகப் போகிறது. பசிபிக் ரிட்ஜ், இந்திய ரிட்ஜ் பகுதிகளில் காற்றின் வேகமாறுபாடு ஏற்படுகிறது.அதில் மாற்றம் ஏற்படலாம். ஆனால், இப்போதே அங்கே என்ன நடக்கும் என்று உறுதியாகக் கூறுவது கடினம். டிசம்பர் முதல் வாரம் உருவாகும் இந்தச் சக்கரம் குறித்து வடதமிழக இந்த சக்கரத்தைக் கவனிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நேற்றிரவு பல இடங்களில் நல்ல மழை பெய்தது. குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது. மழையால் இந்த மாவட்டங்களில் விடுமுறையும் அளிக்கப்பட்டது.

அதேநேரம் நேரம் செல்ல செல்ல மழை கணிசமாகக் குறைந்தது. இதற்கிடையே தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வரும் நாட்களில் வானிலையில் ஏற்படப் போகும் மாற்றம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
வெதர்மேன்: இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "டிசம்பர் முதல் வாரம் சங்கரம் உருவாகப் போகிறது. பசிபிக் ரிட்ஜ், இந்திய ரிட்ஜ் பகுதிகளில் காற்றின் வேகமாறுபாடு ஏற்படுகிறது. அதில் மாற்றம் ஏற்படலாம். ஆனால், இப்போதே அங்கே என்ன நடக்கும் என்று உறுதியாகக் கூறுவது கடினம். டிசம்பர் முதல் வாரம் உருவாகும் இந்தச் சக்கரம் குறித்து வடதமிழக இந்த சக்கரத்தைக் கவனிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே வானிலை மையம் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று கூறியிருந்தது. இது இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது. அப்படி உருவாகும்பட்சத்தில் அடுத்த வாரம் தமிழகத்திற்கு நல்ல மழை இருக்கும்.
சென்னை புறநகர்ப் பகுதிகள்: முன்னதாக விடிய விடிய சென்னை மற்றும் புறநகர்களில் இன்று மழை பெய்து வந்தது. கனமழை காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கும் கூட விடுமுறை அளிக்கப்பட்டது. சென்னையில் பெய்த இந்த மழை குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அண்ணா நகர், தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது அதில் தெளிவாகத் தெரிகிறது.
தமிழ்நாடு வெதர்மேன் மேலும் கூறுகையில், "தனிமைப்படுத்தப் பகுதிகளில் மழை பெய்தது. கடலில் உருவாகும் இன்னும் சில மழை மேகங்கள் கூடுதல் மழையைக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அதற்குள் வெயில் வந்துவிட்டதால் மழை குறைகிறது. அடையாறு, அண்ணாநகர் - நுங்கம்பாக்கம் பெல்ட்டின் சில பகுதிகள் நல்ல மழை பெய்துள்ளது. நகரில் சில பகுதிகளில் மழையும் வெயிலும் மாறி மாறி வர வாய்ப்புள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (நவ. 15) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications