சுட்டெரித்த வெயில்.. மாற்றமே கிடையாது.. சென்னைக்கு நாளையும் சம்பவம் தான்.. தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் இன்று பதிவான வெப்பம் தான் நடப்பு ஆண்டிலேயே அதிக வெப்பமான நாள் என்றும், இன்று வெப்பநிலை எப்படி இருந்ததோ அதேபோல தான் நாளையும் வெப்பநிலை பதிவாகும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. சென்னையில் கூட அவ்வப்போது லேசான மழை பெய்தது. மேற்கு தொடர்சி மலையை ஒட்டிய பகுதியில் பரவலாக மழை பெய்தது. தற்போது கடந்த 2 நாட்களாக சென்னையில் வெயில் அடித்து வருகிறது.

அதிலும் இன்று வெயில் 106 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவானது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர். 106 டிகிரி பாரன்ஹீட் என்று வானிலை மையம் கூறினாலும், வெயில் 110 டிகிரியை தாண்டி கொளுத்தியது போல் மக்கள் உணர்ந்தனர். இதேபோல் வரும் 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் 2 - டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதற்கிடையே நடப்பு ஆண்டிலேயே அதிக வெப்பமான நாள் இன்று தான் என்றும், இன்று வெப்பநிலை எப்படி இருந்ததோ, அதேபோல தான் நாளையும் வெப்பநிலை பதிவாகும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு வெதன்மேன் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது:-
மீனம்பாக்கத்தில் இன்று 41.3 செல்சியஸ் வெப்பமும், நுங்கம்பாக்கத்தில் 41.1 செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டிலேயே அதிக வெப்பமான நாள் இதுதான்.. தமிழ்நாட்டில் அதிக வெப்பமான இடமான மீண்டும் இந்த இரண்டு இடங்கள் உள்ளன. நாளையும் எந்த மாற்றமும் இருக்காது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
வேலூருக்கே விபூதி அடித்த சென்னை.. தமிழ்நாட்டில் இன்று வெயில் சதமடித்த ஊர்களின் லிஸ்ட்டில் ட்விஸ்ட்
முன்னதாக இன்று சென்னையில் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 104 டிகிரி பாரன்ஹீட்டும், வேலூரில் 104 டிகிரி பாரன்ஹீட்டும், திருப்பத்தூரில் - 102 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவாகியிருந்தது.
இதற்கு அடுத்தபடியாக, மதுரையில் 101 டிகிரி பாரன்ஹீட்டும், பரங்கிப்பேட்டை, மதுரை விமான நிலையம், புதுச்சேரி, நாகப்பட்டினத்தில் 101 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருந்தது. இதேபோல் தஞ்சாவூர், கடலூரில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரம்.. வெயிலும் இருக்கு.. மழையும் இருக்கு.. சென்னை வானிலை மையம் அப்டேட்
இதேபோல், சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. மேலும் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications