சென்னைக்கு க்ளோசாக.. 50 கிமீ வரை வந்த புயலின் கண்.. இதுதான் சிக்கலே.. வெதர்மேன் சுளீர் வார்னிங்
சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து வெறும் 50 கிலோமீட்டர் தொலைவுக்கு புயலின் மையப்பகுதி வந்துள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
சென்னையை மிக்ஜாம்ம் புயல் அடித்து துவம்சம் செய்து இருக்கிறது. இரவு முழுக்க பெய்த கனமழை, தீவிர காற்று காரணமாக சென்னையே நிலைகுலைந்து போய் உள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்ட மிக்ஜாம், புயல் நாளை கரையை கடக்கிறது. இன்று சென்னைக்கு அருகே கரையை நெருங்கும் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய இடைவிடாமல் பெய்த மழை பெய்தது.
நேற்றிரவு முதல் பெய்த தொடர் மழையின் காரணமாக பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. சென்னையில் பெரும்பாலான இடங்களில் இதனால் கனமழை பெய்து வருகிறது. நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5ல் கரையை கடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் புயல் சென்னைக்கு அருகே நேற்று இரவு வந்ததால் கனமழை பெய்து வருகிறது.

புயல் மோசம்; பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர், சோழவரம், செங்குன்றம், புழல், கும்மிடிப்பூண்டி சுற்று வட்டார இடங்களில் விடிய விடிய காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய 5 துறைமுகங்களில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.,
துறைமுகத்தின் இடது பக்கமாக புயல் கரையை கடந்து செல்லும் சமயத்தில் கடுமையான வானிலை நிலவக்கூடும் என்பதை குறிக்கும் வகையில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 4 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
வெதர்மேன் அறிக்கை: இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், சென்னையை நோக்கி அடுத்த கட்ட கனமழை மேகங்கள் நகர்ந்து வருகின்றன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டை நோக்கி அடுத்த கட்ட மிக கனமழை மேகங்கள் நகர்ந்து வருகின்றன. இதனால் மழை இன்னும் சில மணி நேரங்களுக்கு நீடிக்கும். பலத்த காற்றும் வீசி வருகிறது.
வீட்டிற்கு உள்ளேயே இருக்கவும். அத்தியாவசிய அவசியம் இல்லாதபட்சத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். காலை வணக்கம் மக்களே. ஆரம்பமே வேற லெவல். அண்ணா நகர் மேற்கு மழையில் இரட்டை செஞ்சுரி போடும் நிலை உள்ளது. நான் இருக்கும் ஒரு பகுதி இரட்டை சதம் அடிப்பது இதுவே முதல் முறை. சென்னையில் பல பகுதிகளில் மழை 150 மிமீட்டரை கடந்து விட்டது. காலை 8.30 மணி அளவில் இன்னும் பல பகுதிகளில் மழை இரட்டை சதம் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவசியம் இல்லாமல் வெளியே வர வேண்டாம்,. மிக தீவிரமான காற்று வீசுகிறது. தண்ணீர் தேங்கி உள்ளது.

சென்னையில் வீசும் நீடித்த காற்று
-------------
எண்ணூர் மணிக்கு 35 கி.மீ
புயல் காற்று வேகம்
-----
எண்ணூர் - மணிக்கு 81 கி.மீ
மீனம்பாக்கம் - மணிக்கு 65 கி.மீ
சிறுசேரி - மணிக்கு 60 கி.மீ
நுங்கம்பாக்கம் - மணிக்கு 48 கி.மீ
அருகே வந்த புயல்: சென்னை கடற்கரையில் இருந்து வெறும் 50 கிலோமீட்டர் தொலைவுக்கு புயலின் மையப்பகுதி வந்துள்ளது. அடுத்த தீவிர மழை மேகங்கள் மேலும் சென்னையை நோக்கி தயாராகி வருவதை நாம் காணலாம், இது சென்னையை நெருங்கும் போது பெரும்பாலான இடங்களில் மழை 200 மிமீயை தாண்டும்.












Click it and Unblock the Notifications