மேற்கு நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை!
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்த நிலையில், தற்போது மேற்கு திசையை நோக்கி நகர தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதம் வந்துவிட்டால் சென்னை மக்களுக்கு மழை குறித்த அச்சம் எழுந்துவிடும். இந்த ஆண்டும் அதே அச்சம் தற்போது எழுந்திருக்கிறது. அதாவது கடந்த 10ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது, நேற்று காலை வரை அதே பகுதியில் நிலை கொண்டிருந்தது.

இது காற்றழுத்த தாழ்வு பகுதியை உருவாக்குவதற்கான அறிகுறியாகும். எதிர்பார்த்தபடி, நேற்று மாலை வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது அடுத்த 2 தினங்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என கணிக்கப்பட்டது.
எனவே இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டது. அதன்படி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு நோக்கி நகர தொடங்கியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
மழையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் சென்னையின் மடிப்பாக்கத்தில் 66 மி.மீ மழை பெய்திருக்கிறது. மொத்தமாக சென்னையில் 21 இடங்களில் 15 மி.மீக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. அண்ணா நகர் மேற்கில் 15 மி.மீ, அம்பத்தூரில் 5 மி.மீ, கொளத்தூரில் 10 மி.மீ, பெரம்பூரில் 12 மி.மீ, புழல் 4 மி.மீ, மாதாவரத்தில் 10 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னை முழுவதும் சராசரியாக 25 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.
நேற்றிரவு முதல் மழை பெய்து வந்தாலும், சென்னையில் உள்ள சுரங்க பாதையில் மழை நீர் தேங்கவில்லை. அதேபோல முன்னெச்சரிக்கையாக இன்று சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications