10 மாவட்டங்களுக்கு.. காற்றழுத்த தாழ்வு மையம் வைத்த குறி! அடுத்த 3 மணி நேரம் முக்கியம்! வானிலை மையம்
சென்னை: 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதேபோல் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் என்று மொத்தமாக 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. திருவொற்றியூர் தொடங்கி திருவல்லிக்கேணி, பெசன்ட் நகர் வரையிலும், அண்ணாநகர், அம்பத்தூர் ஆவடி வரை லேசாக மழை பெய்து வருகிறது.
அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை இடங்களிலும் ஆங்காங்கே சாரல் மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
போக்கு காட்டும் காற்றழுத்தம்: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தம் இன்னும் வலிமை இழக்காமல் இருப்பதால் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து,தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர -வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவியது. இரண்டு நாட்களுக்கு முன் இது தமிழக கடலோர பகுதிகளுக்கு அருகே வந்தது.
இந்த தாழ்வு பகுதி நேற்றே வலிமை இழந்து இருக்க வேண்டும். ஆனால் வலிமை இழக்கவில்லை. மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தம் இன்னும் வலிமை இழக்காமல் இருப்பதால் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மிக குளிரான வானிலை நிலவி வருகிறது. மேகமூட்டம் ஏற்பட்டு.. வெப்பநிலை குறைந்து மிக குளிரான வானிலை நிலவி வருகிறது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
26-12-2024 முதல் 27-12-2024 வரை: வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
28-12-2024 மற்றும் 29-12-2024: எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்:
26-12-2024:ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
27-12-2024 மற்றும் 28-12-2024: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 26-12-2024 மற்றும் 27-12-2024:
எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகள்: எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications