Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை வெள்ளத்தால் மக்கள் சிரமம்.. ஓடோடி வந்த நடிகர் விஜய்.. இயக்க நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மற்றும் புறநகரில் மிக்ஜாம் புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் என்றும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக மக்கள் இயக்க நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. மிக்ஜாம் புயல் கரையை கடந்தாலும், மழை முற்றிலுமாக ஓய்ந்த நிலையிலும், வீடுகளைச் சூழ்ந்த மழைநீர் மட்டும் இன்னும் அகலவில்லை. சென்னையின் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் வடிந்தாலும் இன்னமும் நிறைய இடங்களில் தண்ணீர் அகலவில்லை. இதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

The people of Chennai are suffering a lot due to Cyclone michaung, Actor Vijay

குறிப்பாக வேளச்சேரி, பள்ளிக்கரணை, வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, ஒக்கியம் துரைப்பாக்கம், மற்றும் புற்நகர் பகுதிகளான மேற்கு தாம்பரம் மற்றும் முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை வேளச்சேரியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் தனியார் படகுகள் மூலம் மக்கள் வெளியேறி வருகின்றனர்.

சிரமத்தில் மக்கள்: குடி தண்ணீர், பால், உணவு போன்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதேபோல் இந்தப் பகுதியில் மின்சாரம், செல்போன் சேவை இன்னும் கிடைக்கவில்லை. ஒருசில பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கார்களும், பைக்குகளும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டன. இப்படி வெள்ளத்தால் மக்களும் பெரும் துயரத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர் என்றும் உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன என்றும் எனவே மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக மக்கள் இயக்க நிர்வாகிகள் ஈடுபட வேண்டும் என்று நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The people of Chennai are suffering a lot due to Cyclone michaung, Actor Vijay

விஜய் வேண்டுகோள்: இது தொடர்பாக நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

இந்த வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
#கைகோர்ப்போம் துயர்துடைப்போம். இவ்வாறு அவர் ட்வீட் போட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+