பிளக்கும் வானம்! 26 மாவட்டங்களில் 10 செ.மீக்கும் அதிகமாக கொட்டப்போகும் மழை! ஆட்சியர்களுக்கு வார்னிங்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், இன்று தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. எனவே 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தமிழகத்தில் நல்ல மழை பெய்திருக்கிறது. மழையின் அளவு போதுமானதாக இல்லை என்றாலும் கூட, கோடை வெயில் குறையும் அளவுக்கு மழை பெய்திருக்கிறது. பிப்ரவரி இறுதியில் தொடங்கிய கோடை வெயில், ஏப்ரல் மாதத்தில் உச்சத்தை தொட்டது. 22 மாவட்டங்களில் அதிகபட்சமாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெயில் பதிவாகியது. இதனால் மக்கள் கடும் அவதியுற்றனர்.

இப்படி இருக்கையில்தான் கோடை மழை மண்ணையும், மக்களையும் குளிர்வித்தது. மே மாதம் தொடக்கத்தில் தென் மாவட்டங்களில் தலையை காட்டிய கோடை மழை.. கொஞ்சம் கொஞ்சமாக வடமாவட்டத்தையும் நனைத்தது. இன்று வரை பல்வேறு மாவட்டங்களுக்கு மழைக்கான மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இப்படி இருக்கையில் இன்று சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், அதனை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
அதாவது மேற்குத் தொடர்ச்சிமலை மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் & பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் அவசர கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
மிக கனமழை எனில் 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பொழியும் எனில் அந்த பகுதிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படும். தற்போது இந்த 26 மாவட்டங்களில் 10 செ.மீக்கும் அதிகமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எனவே மேற்குறிப்பிட்ட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கும், மழையால் ஏற்படும் பாதிப்புகளை சமாளித்தல், உயிரிழப்புகளை தவிர்த்தல், முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை உடனுகு்குடன் வழங்குதல், வானிலையை தொடர்ந்து கண்காணித்தல், வெள்ள பாதிப்பு ஏற்பட உள்ள பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் போன்ற அறிவுறுத்தல்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
முன்னதாக வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில் தமிழகத்தில் 18ம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரவித்திருந்தது. அதாவது,
"இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் பெய்யவாய்ப்புள்ளது. மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை
17ம் தேதி அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
18ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் 592 பகுதிகள், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
19ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications