இந்த போட்டோவில் இருக்கே வட்டமா! அதுதான் எல்லாத்துக்கும் காரணம்! தென் மாவட்டத்தை உலுக்கிய ஒரு விஷயம்
திருநெல்வேலி: தமிழ்நாட்டில் உள்ள தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை இப்போதைக்கு நிற்க வாய்ப்பு இல்லை. வானிலை மைய மாடல்கள் மழை நிற்காது என்பதையே காட்டுகின்றன.
தென் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 7,500 பேர் மீட்கப்பட்டு, 84 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ள மீட்பு பணிகளுக்காக கூடுதல் படகுகள் அனுப்பப்பட்டுள்ளன. மீட்புப்பணிகளுக்காக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் உதவி கோரப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
மழைக்கு என்ன காரணம்?: காயல்பட்டினத்தில் 24 மணிநேரத்தில் 95 செமீ மழை பெய்துள்ளது. திருசெந்தூரில் 24 மணிநேரத்தில் 69 செமீ மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை இப்போதைக்கு நிற்க வாய்ப்பு இல்லை. வானிலை மைய மாடல்கள் மழை நிற்காது என்பதையே காட்டுகின்றன.

மாடல்கள் சொல்வது என்ன?: கன்னியாகுமரி பகுதிக்கு அருகில் உள்ள கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து நீடிக்கிறது. இது கன்னியாகுமரிக்கு மிக மிக அருகில் உள்ளது. அதுதான் அங்கே தொடர்ந்து மழை ஏற்பட காரணம். இந்த சுழற்சியின் புகைப்படம் காட்டப்பட்டு உள்ளது.
சரியாக குமரிக்கு கீழே அருகில் கடலில் இது உள்ளது. திருநெல்வேலி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகபட்ச சுழற்சி இதனால் காணப்படுகிறது. இந்த கீழடுக்கு சுழற்சி எவ்வளவு ஆழமானது என்பதைக் குறிக்கும் வகையில் மிகக் குறைந்த உயரத்தில் சுழற்சி காணப்படுகிறது. அதாவது சுழற்சி பூமிக்கு மிக அருகில் உள்ளது.
இதனால் மழையின் ஆக்ரோஷமும் மிக மிக அதிகமாக உள்ளது. இங்கே காணப்படும் அத்தகைய வலுவான குவிப்பு மற்றும் கிழடுக்கு சுழற்சி.. மழையை கொடுக்கும் மேக பெல்ட், பட்டைகளை அப்படியே வைத்திருக்கிறது. இதனால் மழை பேண்டுகளை நோக்கி காற்று அதிகம் வருகிறது. இந்த அழுத்தம் மழை மேகங்களை இன்னும் வலுவாக வைத்து இருக்கிறது.
விடாத மழை - வெள்ளம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மையிலாடி - அஞ்சுகிராமம் சாலை, கோழிகோட்டு பொத்தை - தோவாளை சாலை, இறச்சகுளம் - திட்டுவிளை சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. அந்த சாலைகள் வழியே போக்குவரத்து முடக்கம் அடைந்துள்ளது.
( அந்த 15 நிமிடம்.. வானிலை மைய மீட்டரில் காட்டியது என்ன? வல்லுனர் சொன்ன ஷாக் அப்டேட்.. கவனம்!)
திருநெல்வேலி மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. தாமிரபரணி ஆற்றை ஒட்டிய வடக்கு புறவழிச்சாலையில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழுத்தளவுக்கு சூழ்ந்த மழைநீர் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. வீடுகளில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக, மணிமுத்தாறு அணையில் இருந்து 10,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.
திருச்செந்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மழையுடன் காற்றும் வேகமாக வீசுவதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளன. நகரம் முழுவதும் உள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications