அப்படிப் போடு.. தமிழ்நாட்டில் ‘இந்த’ மாவட்டங்களுக்கு ஹாப்பி! அடிச்சு துவைக்க போகுது மழை! சென்னைக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை ஏழு மாவட்டங்களிலும், காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு கோடைக் காலம் பிப்ரவரியிலேயே தொடங்கி விட்டதை போல் தான் இருக்கிறது. கடந்த 110 ஆண்டுகளில் இல்லாத அளவு பிப்ரவரி மாதத்தில் வெப்பநிலை பதிவானது. அதற்கு பிறகு வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்தது.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் மழை எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சிறிது மழையை கொடுத்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் வெப்ப அலை வீச வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 30ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை அதிகமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

Weather Rain imd

குறிப்பாக மேற்கு மத்திய பிரதேசத்தில் 30ஆம் தேதி வரையும், கிழக்கு மத்திய பிரதேச பகுதிகளில் 27 ஆம் தேதி வரை உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் வெப்ப அலை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ஒடிசா, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கடலோர ஆந்திரா மற்றும் காரைக்காலில் வெப்பம் மற்றும் ஈரமான வானிலை காணப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வெப்ப அலை காரணமாக பல்வேறு மாநிலங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை ஏழு மாவட்டங்களிலும், காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் இருப்பதால் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசெளகரியம் ஏற்படலாம்.

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்-ஐ ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. வேலூரில் அதிகபட்சமாக 105° பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவான நிலையில் இந்த மாதத்தில் மட்டும் எட்டு நாட்கள் 104° பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+