அதீத வெப்பத்திற்கு சின்ன பிரேக்.. சென்னையில் இன்று மழை இருக்கு.. குட் நியூஸ் கொடுத்த வெதர்மேன்!
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதீத வெப்பம் இருந்தது. இதனால் மதிய நேரங்களில் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத சூழலே இருந்தது. இதற்கிடையே சென்னையில் இன்று கொஞ்சம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இதன் மூலம் இன்று மாநகரில் வெப்பம் ஓரளவுக்குக் குறையும் என்றும் வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே வெயில் உயர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. பல இடங்களில் தினசரி வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். இடையில் ஓரிரு நாட்கள் மட்டுமே மழை பெய்த போதிலும் பெரும்பாலும் வெப்பமான வானிலையே இருந்தது.

சென்னை வானிலை
குறிப்பாகச் சென்னை மற்றும் புறநகரில் வெயில் வாட்டி வதைக்கிறது. வெயில் உடன் காற்றின் ஈரப்பதமும் சேர்ந்து கொள்ள.. வெளியே சென்றாலே அசவுகரியமான சூழல் நிலவியது. இதற்கிடையே இன்று சென்னைக்கு அருகே மழை மேகங்கள் உருவாகி இருப்பதாக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதனால் சென்னையில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வெப்பம் குறையலாம் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வெதர்மேன் ட்வீட்
இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்வீட்டில், "வேலூர் மற்றும் சென்னைக்கு இன்று மட்டும் கொஞ்சம் (அதீத வெயிலில் இருந்து) நிவாரணம் கிடைக்கலாம்.. இரு பகுதிகளிலும் சில இடங்களில் மழை பெய்தது. வேலூரில் நேற்று இரவு வெப்பம் 40.6 டிகிரி செல்சியஸை தாண்டிய நிலையில், பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது.
இன்று காலை சென்னை கடற்கரைக்கு அருகே வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஒரு மழை மேகக்கூட்டம் நகர்ந்தது. இதனால் சில இடங்களில் மழை பெய்தது. வட சென்னையில் கடற்கரைக்கு அருகில் உள்ள கத்திவாக்கம் மற்றும் எண்ணூரில் பலத்த மழை பெய்தது. இன்று இந்த மழை மேகங்கள் சென்னைக்குள் வரலாம். இது வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். ஆனால், நாளை வெப்பம் மீண்டும் உயரும்" என்று பதிவிட்டுள்ளார்
வானிலை மையம்
முன்னதாக வானிலை மையம் நேற்று வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "இன்றும் நாளையும் (11-04-2025 மற்றும் 12-04-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஏப்ரல் 13 முதல் 16 வரையிலான நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பம்
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கைப் பொறுத்தவரை வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு என்பது இன்றைய தினம் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நாளை (11-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று வானிலை மையம் கூறியிருந்தது.
-
தென்மேற்கு பருவமழை தாமதமாவது ஏன்? புதிய தேதியை அறிவித்த வானிலை மையம்.. அதிகரிக்கும் எல் நினோ அச்சம்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
இந்தியாவை பந்தாட வரும் பிரச்சனை.. எல் நினோ + ஹார்முஸ் நெருக்கடி.. RBI-க்கு தலை சுற்றுகிறது! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications