திருப்பூர், போடியில் வெளுத்து வாங்கிய கனமழை! சூறைக்காற்றால் மக்கள் அவதி
திருப்பூர்: திருப்பூரில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அது போல் போடியிலும் கனமழை வெளுத்து வாங்கியது.
தமிழகத்தில் கோடை வெயில் உச்சத்தில் உள்ளது. அக்னி நட்சத்திரம் நாளை தொடங்குகிறது. இதையொட்டி பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியிருந்தது.

இதனால் பல இடங்களில் வெயில் கொடுமையால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
கடந்த இரு வாரங்களாக வெயிலால் அவதிப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்தது. கிருஷ்ணகிரியில் விடாமல் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அந்த வகையில் நேற்று இரவு வேலூர், திருவண்ணாமலை, திருப்பூர், ஈரோடு, தேனி, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன.
அது போல் போடியிலும் கனமழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பெங்களூரில் நேற்று முன் தினம் பகலிலும் இரவிலும் மழை கொட்டியது.
தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டலக் கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்குத் திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 4 மற்றும் 5ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 6ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, மயிலாடுதுறை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (03-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று வானிலை மையம் கூறியுள்ளது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
கோவை டூ குமரி வரை.. இன்று 10 மாவட்டங்களில் விட்டு விளாச போகுது கனமழை.. சென்னைக்கும் அலர்ட் -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications