மிதமான வெப்பநிலை+வெயிலால் அசௌகரியம்! குழப்பியடிக்கும் தமிழக கிளைமேட்! வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஒரு சில பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என்றும், அதே நேரம் சில பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் வானிலை அறிவிப்பில், அடுத்த ஒரு வாரத்திற்கான எச்சரிக்கை மற்றும் சென்னை வானிலை முன்னெச்சரிக்கை ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கின்றன.

"தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
- கொள்ளிடம் (மயிலாடுதுறை) 6,
- நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), மணமேல்குடி (புதுக்கோட்டை) தலா 5,
- உத்தமபாளையம் (தேனி), மஞ்சளாறு (தேனி), கழுகுமலை (தூத்துக்குடி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்) தலா 4,
- பெரியகுளம் PTO (தேனி), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), சாத்தியார் (மதுரை) தலா 3,
- ராணிப்பேட்டை AWS (ராணிப்பேட்டை), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), எழுமலை (மதுரை), புத்தன் அணை (கன்னியாகுமரி), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), மிமிசல் (புதுக்கோட்டை), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), பெரியகுளம் (தேனி), தம்மம்பட்டி (சேலம்), அண்ணாமலை நகர் (கடலூர்), சிற்றாறு | (கன்னியாகுமரி) தலா 2,
- வலங்கைமான் (திருவாரூர்), சிதம்பரம் (கடலூர்), பழனி (திண்டுக்கல்), பெரியாறு (தேனி), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), கடவூர் AWS (கரூர்), புவனகிரி (கடலூர்), மதுரை விமானநிலையம் (மதுரை), புலிப்பட்டி (மதுரை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), நீடாமங்கலம் (திருவாரூர்), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), கும்பகோணம் (தஞ்சாவூர்), ராஜபாளையம் (விருதுநகர்), ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), சோத்துப்பாறை (தேனி), தல்லாகுளம் (மதுரை) தலா 1.
வெப்பநிலை நிலவரம்:
அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 40.2° செல்சியஸ் வெயில் பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 22.0° செல்சியஸ் வெயில் பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. எனினும் ஒருசில இடங்களில் சற்று குறைந்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
வட தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36-40° செல்சியஸ், தென் தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-39* செல்சியஸ், வடதமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33-36° செல்சியஸ், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் 3-35° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 20-28* செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப்.30 முதல் மே.3 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே.4ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த அளவில், இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. நாளை தொடங்கி மே மாதம் 2ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3" செல்சியஸ் வரை உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3* செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
ஏப்.30 முதல் மே மாதம் 2ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3" செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
அதேபோல இன்று தொடங்கி மே 2 வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசெளகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (28-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (29-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள், அரபிக்கடல் பகுதிகள் & வங்கக்கடல் பகுதிகளில் இன்று தொடங்கி மே மாதம் 2ம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications