அடுத்த 2 மணி நேரம்.. கோவை டூ நெல்லை வரை.. 5 மாவட்டங்களில் அடித்து பெய்யப் போகும் மழை.. வானிலை அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று மாலை 4 மணி வரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் (TN Weather Alert) கூறியுள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று குறைந்துள்ளது. நேற்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

tn-weather-alert-chance-of-rain-in-5-districts-from-coimbatore-to-nellai-in-the-next-2-hours

அடுத்த 3 மணி நேரத்திற்கு

கோவை சின்னக்கல்லாரில் 5 செமீ மழை பதிவானது. சோவையார், சின்கோனா பகுதியில் 4 செமீ மழை பதிவானது. இதேபோன்று நீலகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், குமரி, புதுக்கோட்டை, நெல்லை, சென்னை, தஞ்சை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

"தமிழத்தில் இன்று மாலை 4 மணி வரை கோவை, நீலகிரி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று தேனி மற்றும் நெல்லை மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

நாளை கரையை கடக்கும்

முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- நேற்று (13-08-2025) மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (14-08-2025) 08.30 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திரா பகுதிகளை கடக்கக் கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்று கோவை, நீலகிரியில் கனமழை கொட்டும்

14-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

20 ஆம் தேதி வரை மழை தான்

15-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 16-08-2025 முதல் 20-08-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று நாளை மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்று (14-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை (15-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+