மழையும் இருக்கும்.. பொளக்கப்போகும் வெயில்! அசௌகரியம் ஏற்படலாம் என வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. அதே நேரம் சில இடங்களில் மழையும் பெய்திருக்கிறது. இந்நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு மழையும், வெயிலும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
- குழித்துறை (கன்னியாகுமரி), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), நெய்யூர் AWS (கன்னியாகுமரி) தலா 4,
- பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), பேச்சிப்பாறை AWS (கன்னியாகுமரி), சிவகங்கை (சிவகங்கை), சிற்றாறு-) (கன்னியாகுமரி), குளச்சல் (கன்னியாகுமரி) தலா 3,
- சேரன்மகாதேவி (திருநெல்வேலி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), பாண்டவரடி (திருவாரூர்), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), பாலமோர் (கன்னியாகுமரி), திருச்சுழி (விருதுநகர்). வால்பாறை PTO (கோயம்புத்தூர்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), சுருளக்கோடு (கன்னியாகுமரி), உபாசி TRE AWS (நீலகிரி) தலா 2,
- நாகர்கோயில் (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), நாகர்கோயில் ARG (கன்னியாகுமரி), மேலூர் (மதுரை), பெரியாறு (தேனி), தக்கலை (கன்னியாகுமரி), கமுதி ARG (ராமநாதபுரம்), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), ஓரத்தநாடு (தஞ்சாவூர்), சோலையார் (கோயம்புத்தூர்), கமுதி (ராமநாதபுரம்), ராதாபுரம் (திருநெல்வேலி), பேராவூரணி (தஞ்சாவூர்), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), சின்கோனா (கோயம்புத்தூர்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), இரணியல் (கன்னியாகுமரி), காரியாப்பட்டி (விருதுநகர்) தலா 1 என மழை பதிவாகியிருக்கிறது.
வெப்பநிலை நிலவரம்:
அதிகபட்ச வெப்பநிலையாக சேலம் மாவட்டத்தில் 39.1° செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. குறைந்தபட்ச வெப்பநிலையாக (சமவெளிப்பகுதிகளில்) அதிராமபட்டினத்தில் 22.9° செல்சியஸ் வெயில் பதிவாகியிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3* செல்சியஸ் குறைந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 36 39" செல்சியஸ், வடதமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 37° செல்சியஸ், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் 34° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 21 28° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. எனவே 27-04-2025 மற்றும் 28-04-2025ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
29-04-2025 முதல் 02-05-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
03-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்த அளவில், 27-04-2025 மற்றும் 28-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. 29-04-2025 முதல் 01-05-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் வரை உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
27-04-2025 மற்றும் 28-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். 29-04-2025 முதல் 01-05-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
27-04-2025 முதல் 01-05-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (27-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (28-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்/ அரபிக்கடல் பகுதிகள்/ வங்கக்கடல் பகுதிகள்: 27-04-2025 முதல் 01-05-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications