அடுத்த 2 மணி நேரம்.. விட்டு விளாசப் போகும் மழை.. தமிழகம் முழுக்க 25 மாவட்டங்களுக்கு அலர்ட்! வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுக்க 25 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை விட்டு விளாசப் போவதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருவள்ளூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்டும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தேனி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் கூறியிருந்தது. அதற்கு ஏற்றபடியே கடந்த 4 நாட்களாக வெயில் சுட்டெரித்த நிலையில் இன்று மதியத்திற்கு பிறகு வெயில் குறைந்தது. வானம் மேமமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது.

tn-weather-chance-of-rain-with-thunder-and-lightning-in-25-districts-in-the-next-2-hours

7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

இந்த சூழலில் தான் அடுத்த 2 மணி நேரத்தில் மழை கொட்டி தீர்க்கப் போவதாக வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இன்று இரவு 7 மணி வரை 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

"தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இரவு 7 மணி வரை திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

18 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை

இதேபோன்று இன்று இரவு 7 மணி வரை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், விருதுநகர், திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் தென்காசி ஆகிய 18 மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் புதுவையில் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழை வெளுத்து எடுக்கும்

குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கன முதல் மிக கனமழை கொட்டும்

வரும் 4 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தேனி, தென்காசியில் மிக கனமழைக்கு சான்ஸ்

வரும் 5 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, திண்டுக்கல், திருச்சி, திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

8 ஆம் தேதி வரைக்கு மழை தான்

வரும் 6 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 7 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 8 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் எப்படி?

சென்னையில் இன்று (02-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை (03-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+