மழை பாதிப்பு.. விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! மீண்டும் இயங்கும் தேதி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: புயல் மற்றும் வெள்ளத்தினால் கடுமையாக பாதித்த விழுப்புரத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் கிழமை முதல் வழக்கம் போல பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டிப்போட்டுள்ளது. புயலின் தாக்கத்தினால் கடந்த 30, 1-ம் தேதி என 2 நாட்கள் தொடர்ந்து இடைவிடாது கனமழை பெய்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

villupuram school holidays rain

தென்பெண்ணையாறு, மலட்டாறு, பம்பையாறு, நரியாறு, சங்கராபரணி, வராகநதி உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களும் அதிகம் பாதிப்படைந்தன. கனமழைக்கு பிறகும் அடிக்கடி விட்டு விட்டு மழை பெய்தததால் மீட்பு பணிகளில் கடும் சவால் ஏற்பட்டது.

வெள்ள மீட்பு பணிகள் இன்னமும் முழுமையாக முடிவடையவில்லை. இந்த நிலையில் விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 9 ஆம் தேதி திங்கள் கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+