Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2015 அதே நாள்.. கண் முன் நிறுத்திய கனமழை வெள்ளம்... கடும் போக்குவரத்து நெரிசல்.. ஸ்தம்பித்த சென்னை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கனமழை விடாமல் பெய்து வருவதால் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் இரவு நாளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கண் முன் நிறுத்தியுள்ளது மழை வெள்ளம்.

வடகிழக்கு பருவமழை தனது வேலையை காட்டி விட்டது. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பது போல சென்னையில் விடாமல் கொட்டித்தீர்க்கிறது கனமழை. சில மணி நேரங்களிலேயே 15 செமீ மழை கொட்டியதால் பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. ம விட்டால் வெள்ளம் வடிந்து விடும் என்று சொன்னாலும் எதிர்பாராத மழையால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Traffic Jams at many places in Chennai Take precautions ChennaiRains

தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவடைந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயலுக்கு மிக்ஜாம் அல்லது மிக்ஜாங் புயல் என பெயரிடப்படுகிறது.

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக மழையும் வெயிலுமாக இருந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதலே மழை பெய்து வருகிறது. இன்று பிற்பகலுக்கு மேல் மழை தீவிரமடைந்தது. சென்னையின் நகர் பகுதிகளில் மட்டுமல்லாது புறநகர் பகுதிகளிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளது.

பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அண்ணாநகரில் வாகனங்கள் நத்தை வேகத்தில் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. மாலையில் அலுவலகத்தில் பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் மழையில் நனைந்த படியே சாலையில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை கொளத்தூரில் 2 மணி நேரத்தில் 10 செமீ மழை பதிவாகியுள்ளதால் வெள்ளநீர் தேங்கியுள்ளது. மழை நின்ற உடன் வெள்ளநீர் வடிந்து விடும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை பல்லாவரம் பம்மல் மெயின் ரோட்டில் பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மழை விடாமல் கொட்டி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வேளச்சேரியில் பல குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு இதே போல நவம்பர் இறுதியில் பெய்த மழையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதில் மக்கள் விடிய விடிய சாலைகளில் மழையில் நனைந்தபடியே பயணம் செய்தனர். நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 1ஆம் தேதி வரைக்கும் பெய்த அதீத கனமழையால் ஏரிகள் நிரம்பி வழிந்தன. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. சென்னையை பெருவெள்ளம் சூழ்ந்ததை யாராலும் மறக்க முடியாது. அதே போல நவம்பர் இறுதியில் கொட்டித்தீர்த்த மழையால் சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+