சென்ட்ரலுக்கு வரும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்.. பாதி வழியில் தவிக்கும் பயணிகள்!
சென்னை: சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், பெங்களூரிலிருந்து வரும் ரயில்கள் சென்ட்ரலுக்குள் வராமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கின்றன.
சென்னையிலிருந்து மைசூர் செல்லும் வண்டி எண் 12685 ரயில் சென்ட்ரலுக்கு பதிலாக பெரம்பூரிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டிருக்கிறது.

சென்னை சென்ட்ரலிலிருந்து திருப்பதி செல்லும் வண்டி எண் 16203 ரயில், ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
மும்பையிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் வண்டி எண் 12163 லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ஆவடியுடன் நிறுத்தப்படுகிறது. அதேபோல இன்று புறப்படும் வண்டி சென்ட்ரலுக்கு பதில் ஆவடியிலிருந்து புறப்பட்டிருக்கிறது.
சென்ட்ரலிலிருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் வண்டி எண் 12623 ரயில், சென்னை கடற்கரையிலிருந்து இரவு 8 மணிக்கு புறப்படுகிறது
மங்களூரிலிருந்து சென்னை சென்ட்ரல் வரும் வண்டி எண் 22638 வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் சென்ட்ரலுக்கு செல்லாமல் திருவள்ளூருடன் நிறுத்தப்படுகிறது.
அதேபோல சென்னை சென்ட்ரலிலிருந்து மங்களூரு செல்லும் வண்டி எண் 12601 சென்ட்ரலுக்கு பதில் ஆவடியிலிருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் சென்ட்ரல் நோக்கி வரும் பல ரயில்கள் அரகோணத்திலும், திருவள்ளூரிலும் பெரம்பூரிலும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கிறது. எனவே, பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் லிஸ்ட்டை தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கிறது.


-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications