Chennai Rains: வடகிழக்கு பருவமழைக்கு முன்பே! வங்கக் கடலில் 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள்!
சென்னை: வங்கக் கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறியிருப்பதாவது: வங்கக் கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலை உள்ளது. செப்டம்பர் 23ஆம் தேதி வங்கக் கடல் பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

செப்டம்பர் 26ஆம் தேதி வடகிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகிறது. தமிழகத்தில் செப்டம்பர் 19,21 ஆகிய இரு நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
7 முதல் 11 செ.மீ. வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் 2 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்தது.
நேற்று மாலை முதலே வானம் இருண்டது. பின்னர் 7 மணிக்கெல்லாம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குளிர்ச்சியான சூழலும் நிலவி வருகிறது. சென்னையில் இன்னும் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என சொல்கிறார்கள்.
இந்த நிலையில் இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வரும் செப் 25ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் (செப் 19), நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தென்கிழக்கு பருவமழை காலம் முடிவடைந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க போகிறது. அதாவது வரும் அக்டோபர் 3ஆம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதற்குள்ளாகவே சென்னையில் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதிலும் இந்த ஆண்டு மழை கடுமையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
-
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications