ஐநா தந்த "கோட் ரெட்" எச்சரிக்கைக்கும்.. கடலூரை உலுக்கிய "பெஞ்சல்" மழைக்கும் என்ன தொடர்பு? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச அளவில் ஐநா தந்த காலநிலை எச்சரிக்கை பழிக்க தொடங்கி உள்ளது. காலநிலை பாதிப்புகள் தமிழ்நாட்டிலும் வெளிப்படையாக தெரிய தொடங்கி உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் கோரத்தாண்டவம் ஆடி உள்ளது. திடீர்குப்பம், குண்டுசாலை, செம்மண்டலம், வெளிச்செம்மண்டலம், சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 23 இடங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ, விழுப்புரம் மாவட்டம் கெடாரில் 42 செ.மீ, தருமபுரி மாவட்டம் அரூரில் 33 செ.மீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தலில் 32 செ.மீ, திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் 23 செ.மீ. மழை பதிவு பெய்துள்ளது.

tamilnadu weatherman summer weather news


தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாணி ஆற்றில் 20 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஊருக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மாநில பேரிட மீட்புப் படையினர் அங்கே மக்களை மீட்டு முகாமிற்கு அழைத்து சென்று வருகின்றனர்.

காலநிலை மாற்றம்: இதன் மூலம் சர்வதேச அளவில் ஐநா தந்த காலநிலை எச்சரிக்கை பழிக்க தொடங்கி உள்ளது. காலநிலை பாதிப்புகள் தமிழ்நாட்டிலும் வெளிப்படையாக தெரிய தொடங்கி உள்ளது.

உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம்.

இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில நாட்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் இடம்பெற்ற வரிகள் இவை.

ஆம், காலநிலை மாற்றம் மிக மோசமான நிலையை அடைந்துவிட்டதாகவும், நாம் காலநிலை மாற்றத்தின் கோட் ரெட் காலத்தில் இருப்பதாகவும் இந்த ஆய்வு அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிலும் இந்த நூற்றாண்டு முழுக்க கடலோர பகுதிகளில் கடல் மட்டம் தொடர்ந்து உயரும். இதனால் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து வெள்ளங்கள், புயல்கள் ஏற்படலாம்.

கடலோரத்தை ஒட்டி இருக்கும் சிறு சிறு கிராமங்கள் மொத்தமாக அழிந்து போகவும் வாய்ப்புகள் உள்ளன. பல கடல் கரைகள் காணாமல் போகும். 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்பு ஏற்பட்டு வந்த கடல் சார்ந்த வெள்ளம், கடல் சார்ந்த பேரிடர்கள் இனி எல்லா வருடமும் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன.

எதிர்காலம் ஆபத்து நிறைந்ததாக காணப்படுகிறது. வெப்பநிலை இனி வரும் நாட்களில் உயர உயர மேலும் மோசமான காலநிலை ஆபத்துகள், பேரிடர்கள் ஏற்படும், பனிப்பாறைகள் வேகமாக உருகும். நினைத்ததை விட காட்டுத்தீகள் வேகமாக பரவும். வெப்ப காற்று தாக்குதல்கள் இனி அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இது ஆர்க்டிக் கடலில் ஐஸ் உருகவும், அங்கு மின்னல் பாதிப்புகளை ஏற்படுத்தவும், பனி பாறைகள், படலங்கள் உருகவும் வழி வகுக்கும் என்று ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

இப்படிப்பட்ட நிலையில்தான் வடமாவட்டங்களில் தமிழ்நாட்டில் கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான மழை பெய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+