வைகை அணையில் 3,000 கன அடி நீர் திறப்பு.. மதுரையில் கடலாக உருமாறிய வைகை நதி- போக்குவரத்து நிறுத்தம்!
மதுரை: மதுரை மாநகருக்குள் வைகை நதி கடல் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து மதுரை மாநகரில் கோரிப்பாளையம் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வெளுத்தெடுத்தது. இதனால் மூல வகை, கொட்டக்குடி, சுருளியாறு ஆகியவற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து 24,000 கன அடியாக அதிகரித்தது. இதனையடுத்து வைகை அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென 68 அடியாக உயர்ந்தது.

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 71 அடி உயரம் கொண்டது. தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில் வைகை அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளது.
இதனைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து 5 மாவட்ட பாசனங்களுக்காக நீர் திறந்துவிடப்பட உள்ளது. இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை கரையோர மக்களுக்கு 3-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரே ஆண்டில் 2-வது முறையாக வைகை அணை பாசனத்துக்காக திறக்கப்படுவது 5 மாவட்ட விவசாயிகளை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளது.
இதனிடையே மதுரை மாநகரில் வைகையில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. மதுரை மாநகரில் வைகை வெள்ளம் கடல் போல காட்சியளிக்கிறது. மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது. மேலும் கோரிப்பாளையம் பாலத்தில் அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications