விழுப்புரத்தை புரட்டிப்போட்ட மழை.. ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
விழுப்புரம்: பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துள்ளது. மழை காரணமாக பல்வேறு பகுதிகள் நீரில் முழ்கியுள்ள நிலையில் விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையேயுள்ள ரயில்வே பாலமும் மழை நீரில் மூழ்கியது. இந்நிலையில், சென்னையில் இருந்து விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல் நேற்று நள்ளிரவில் புதுச்சேரி அருகில் கரையைக் கடந்தது. இதையடுத்து, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை காணாத அளவுக்கு மழை பெய்தது. பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது.

வியாழக்கிழமை காலை முதல் பெய்து வரும் மழை இன்றும் விடாமல் தொடர்ந்து பெய்தது. விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அதிகபட்சமாக 51 செ.மீ மழை பெய்துள்ளது. இதேபோல் வானூர், மரக்காணம், திண்டிவனம் உள்ளிட்ட இடங்களில் 40 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. அதிக மழைப் பொழிவு காரணமாக விழுப்புரம் நகரம் முழுவதுமே வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இருசக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை, வெள்ளம் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் - முண்டியம்பாக்கம் இடையேயான ரயில்வே பாலம் மழை நீரில் மூழ்கியுள்ளதால், சென்னையில் இருந்து விழுப்புரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த பல்லவன், வைகை விரைவு ரயில்கள் விழுப்புரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தென்மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு நேற்றிரவு புறப்பட்ட ரயில்கள் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வழியாக எழும்பூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று காலை தென்மாவட்டங்களில் இருந்து புறப்பட வேண்டிய நெல்லை வந்தே பாரத், வைகை, பல்லவன், சோழன் ஆகிய விரைவு ரயில்கள் இரு வழித்தடத்திலும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய தேஜஸ் ரயில், குருவாயூர் விரைவு ரயில் மற்றும் புதுச்சேரி செல்லக்கூடிய ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் மட்டும் மாற்று வழித்தடத்திலும், சில ரயில்கள் சென்னை - விழுப்புரம் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்கு உதவும் வகையில் உதவி எண்களும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் - 044 25354140, சென்னை எழும்பூர் - 9003161811, தாம்பரம் - 8610459668, செங்கல்பட்டு - 9345962113 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications