சென்னையில் கொளுத்தும் வெயில்.. இன்றும் நாளையும் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வாட்டும்! வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. இருப்பினும் வெயிலின் தீவிரம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் இன்று சென்னையில் வெயில் அதிகமாக இருக்கும் என வானலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக மார்ச் இறுதியில்தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி இறுதியிலேயே வெயில் தொடங்கிவிட்டது. மார்ச் முழுவதும் வெயில் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், ஏப்ரல் தொடக்கத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் வெயிலின் தாக்கம் தீவிரமாகதான் இருக்கிறது.

இந்நிலையில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
24, 25-ம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26, 27-ம் தேதிகளில் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் இன்று முதல் 25-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், இதர உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், சென்னையில் இன்றும் நாளையும் வெயில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும் எனவே மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நேற்று வெளியான வானிலை அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் முழுவதும் வெயில் இயல் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக ஈரோட்டில் 107.96 டிகிரி பாரன்ஹீட்டை வெயில் பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 4.7 டிகிரி செல்சியஸ் அதிகம்.
ஈரோடுக்கு அடுத்து கரூர் பரமத்தியில் 106.7, சேலத்தில் 105, வேலூரில் 105.44, திருச்சியில் 105.08, திருப்பத்தூர், தருமபுரி, மதுரை விமான நிலையத்தில் 104.36, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் என வெயில் வாட்டியிருக்கிறது. அதேபோல இன்று தொடங்கி அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் தீவிரமாக இருக்கும் என்பதால், அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
குறிப்பாக சொல்வதெனில் அடுத்த 4 நாட்களுக்கு வட உள் மாவட்டங்களில் சில இடங்களிலும், தமிழகத்தின் பிற உள் மாவட்டங்களிலும் இயல்பாக பதிவாகும் வெப்பநிலையை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகும் என்றும், புதுச்சேரி காரைக்காலில் வெப்ப நிலையை பொறுத்த அளவில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications