ட்விஸ்ட் தந்த புயல் சின்னம்.. அடடா சென்னைக்கு வந்த புதிய பிரச்சனை.. இப்படியே போனால்.. சிக்கல்தான்!
சென்னை: வடகிழக்கு பருவமழை இதுவரை சென்னையில் பெரிய அளவில் மழையை கொடுக்கவில்லை. அடுத்தடுத்து உருவான புயல் சின்னங்கள் எதுவும் பெரிதாக சென்னைக்கு மழையை கொடுக்கவில்லை.
கடந்த மாதம் வந்த புயல் சின்னம் மேற்கு வங்கம் நோக்கி சென்றது. அதேபோல் இரண்டு நாட்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறும் முன்பே வலிமை இழந்தது. சென்னைக்கு இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் சென்னையில் இதுவரை பெரிதாக மழை பெய்யவில்லை.

இதனால் சென்னைக்கு நீர் தரும் ஏரிகளில் தண்ணீர் அளவு குறைந்துள்ளது. ஆந்திர மாநிலத்திலிருந்து கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி 50% நிறைந்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 1812 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. மழையின் காரணமாக 100 கன அடி நீரும், கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக 315 கன அடி நீர் என மொத்தமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 415 கன அடி நீர் வரத்துள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 42.14% நீர் இருப்பு உள்ளது.
செம்பரம்பாக்கம் - 45.13%
புழல் - 73.06%
பூண்டி - 15.63%
சோழவரம் - 7.77%
கண்ணன்கோட்டை - 62%
சென்னை நகரில் 80% தண்ணீரை வழங்கும் சென்னையின் நீர்த்தேக்கங்கள் தற்போது அவற்றின் கொள்ளளவில் 45% ஆகவும், பூண்டி நீர்த்தேக்கம் 14.5% மும் நிரம்பி உள்ளது. நகரின் ஆறு முக்கிய நீர்த்தேக்கங்கள் முழுவதிலும் மொத்த சேமிப்பு 6 டிஎம்சி அடியாக உள்ளது, இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு இந்த சேமிப்பு 9.4 டிஎம்சி அடியாக இருந்தது. சென்னைக்கு செவ்வாய்க்கிழமை 1,113.2 மில்லியன் லிட்டர் தண்ணீர் வந்தது.
இதனால் சென்னையில் தொடர்ந்து மழை பெய்யவில்லை என்றால் அடுத்த வருடம் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. வடகிழக்கு பருவமழை இதுவரை சென்னையில் பெரிய அளவில் மழையை கொடுக்கவில்லை. அடுத்தடுத்து உருவான புயல் சின்னங்கள் எதுவும் பெரிதாக சென்னைக்கு மழையை கொடுக்கவில்லை.
கடந்த மாதம் வந்த புயல் சின்னம் மேற்கு வங்கம் நோக்கி சென்றது. அதேபோல் இரண்டு நாட்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறும் முன்பே வலிமை இழந்தது. சென்னைக்கு இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் சென்னையில் இதுவரை பெரிதாக மழை பெய்யவில்லை என்பதால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கனமழை பெய்யும். நகரின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications