வெளியே வராதீங்க.. தமிழ்நாட்டில் திடீர்னு உயரும் வெப்பநிலை.. அதென்ன , "ஹீட் ஸ்ட்ரெஸ்"? நோட் பண்ணுங்க
சென்னை: தமிழகத்தில் திடீர் வெப்ப அழுத்தம் ஏன் ஏற்படுகிறது? இதற்கான காரணம் என்ன? இதுகுறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
பொதுவாகவே, தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் வெப்பம் குறைந்து காற்று வீச ஆரம்பித்துவிடும்.. ஆனால் கடந்த சில நாட்களாகவே, வெயில் தாக்கம் நம் மாநிலத்தில் அதிகரித்து காணப்படுகிறது.

வழக்கமாக, ஜுன், ஜூலை மாதங்களில் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும்.. ஆனால் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய வெயில் இப்போதுவரை அதிகரித்து வருகிறது. நேற்றுகூட, 13 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்தது.. ஏற்கனவே, இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை மையமும் எச்சரித்தபடியே இருந்தது..
ஹீட் ஸ்ட்ரெஸ்: இப்படி வெப்ப நிலை தொடர்ந்து அதிகரிப்பது, ஈரப்பதம் உயர்வு காரணமாக, "ஹீட் ஸ்ட்ரெஸ்" எனப்படும் வெப்ப அழுத்தம் ஏற்படும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது. இந்த திடீர் வெயில் தாக்கம் ஏன் என்பது குறித்து, வானிலை மைய அதிகாரி கீதா விளக்கம் ஒன்றை தந்திருந்தார்.
அவர் சொல்லும்போது, "பொதுவாக தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு அதிகமாக கிடைக்காது. மேற்கு தொடர்ச்சி மலைகள் இங்கு இருப்பதால் அரபிக்கடலில் உருவாகி வரும் காற்றை அது தடுத்து விடுகிறது.. அதனால்தான் எப்போதுமே, கேரள பகுதிக்கு தான் மழை பொழிவு அதிகமாக இருக்கும்... இப்போது, வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருப்பதால் வடமேற்கு திசையில் இருந்து வருகிற காற்று தடைபட்டுள்ளது.
லேசான மழை: நிலப்பகுதியில் இருந்துதான் காற்று வருகிறது.... இப்படி வரும்போது இடி, மின்னலுடன் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஆனால் அந்த மழையும் பெய்யவில்லை. அதனால் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.
மேற்கு திசையில் இருந்து காற்று வரவர வெப்பம் குறையும். ஆனால் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்று இல்லாததால் தான் வெயில் இயல்பை விட அதிகரித்தது.. ஆனால், இந்த வெப்பம் படிப்படியாக குறையும்... தென்மேற்கு பருவமழை காலத்தில் இப்படியான வெயில் தாக்குவது இயல்பானது.. அதுவும் தமிழ்நாட்டுக்கு இது ஒன்றும் புதிது கிடையாது" என்று கூறியிருந்தார்.
வடமாநிலம்: அதேசமயம், சில தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் பொதுவான அறிவுரைகளை தந்துள்ளனர். "வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் வீசும் மேற்கு திசை காற்று, வெப்பத்தை உயர்த்துவதாக அமைந்துள்ளது.. இந்நேரத்தில், கடல் காற்றின் ஆதிக்கம் அதிகரிக்க வேண்டும் அல்லது வளிமண்டல சுழற்சி காரணமாக மழைபொழிவு ஏற்பட்டால் வெப்பத்தின் தாக்கம் கட்டுப்படுத்தப்படும்.
ஆனால், இது எதுவுமே நடக்காதபோது, வெப்பம் மட்டுமே அதிகரிக்கிறது.. இந்நேரத்தில், வெளியில் பைக்கில் செல்வோர், கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.. உடல் பலவீனமாக இந்த வெயில் திடீர் பாதிப்பை தரக்கூடும்..
கண் கண்ணாடி: அதிகமாக வியர்வை வெளியேறும். மயக்கம் வரலாம்.. இதைத்தவிர்க்க, தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.. உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேசமயம், காலை, 11 மணி முதல் 4 மணி வரை நேரடி வெயிலில் இருப்பதையும் தவிர்த்து கொள்ளலாம். முக்கியமாக, டாக்டர்கள் பரிந்துரைத்த வெப்பத்தடுப்பு லோஷன்கள், கண் கண்ணாடிகளை பயன்படுத்தலாம்" என்கிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications