குறி வச்சா.. மிஸ் ஆகாது! தமிழ்நாட்டில்தான் பெங்கல் புயல் கரையை கடக்கும்.. ஆனால்.. ஒரு ட்விஸ்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டு உள்ளது. 21 செ.மீ-க்கு அதிகமான மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் இன்றும் (நவ.27) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் மையம் கொண்டு உள்ள புயல் சின்னத்தின் கண் தொடர்பான முக்கியமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வானிலை மைய கணிப்புபடி இன்று புயலாக மாறும். இதற்கு 'FENGAL - ஃபெங்கல்' என பெயர் சூட்டப்படும். இப்பெயரை சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாகைக்கு 400 கி.மீ. தென் கிழக்கிலும், சென்னைக்கு 590 கிமீ தெற்கு - தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள்ளாக மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்!
சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
விழுப்புரம்
கடலூர்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
திருவாரூர்
தஞ்சாவூர்
புதுக்கோட்டை
அரியலூர்
பெரம்பலூர்
சிவகங்கை
ராமநாதபுரம்
நீலகிரி
கோவை
கள்ளக்குறிச்சி
திருச்சி
தென்காசி
விருதுநகர்
மதுரை
தூத்துக்குடி
திருநெல்வேலி
கன்னியாகுமரி
கரையை கடக்கும்: இந்த புயல் தமிழ்நாட்டில் கரையை கடக்கும் என்பது உறுதியாகி உள்ளது. இது மிஸ்ஸாக வாய்ப்பே இல்லை. சரியாக 30ம் தேதி வடதமிழ்நாட்டில் கரையை கடக்கும்.
இந்த புயலின் கண் உருவாகவில்லை என்றாலும் தாழ்வு மையத்தின் கண் போன்ற மையம் உருவாகி வருகிறது. இது வலுவாக இருக்கிறது. சென்னையில் இருந்து சுமார் 900 கிமீ தூரத்தில் கண் உள்ளது. அதன் புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. ஆனால் புயல் கண்ணுடன் இருக்குமா.. கண்ணை கொண்டு இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த ஒரு விஷயம்தான் இப்போது வரை கேள்வியாக உள்ளது.
நாகையில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 590 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக வலிமை அடைந்து வருகிறது.
அடுத்த ஒரு வாரம் தமிழ்நாடு வானிலை மைய அறிவிப்புப்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மற்றும் புதுக்கோட்டை இடங்களில் கனமழை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கனமழை பெய்யும். நகரின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications