பொங்கல் முடிஞ்சு சென்னை திரும்புறீங்களா? மழை இருக்கு கவனம்! வெதர்மேன் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில் ஜன.19 மற்றும் 20ம் தேதிகளில் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது x தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, "

கொடைக்கானல் - 7.8 செல்சியஸ்
ஊட்டி - 8.6 செல்சியஸ்
குன்னூர் - 9.8 செல்சியஸ்
ஏற்காடு - 10.0 செல்சியஸ்
சிக்மகளூர் - 10.4 செல்சியஸ்
மூணாறு - 11.1 செல்சியஸ்
அரக்கு - 11.7 செல்சியஸ்
வயநாடு - 13.8 செல்சியஸ்
வால்பாறை - 14.0 செல்சியஸ்
ஏலகிரி - 14.9 செல்சியஸ்
என குறைந்த வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. சமவெளி பகுதிகளை பொறுத்தவரை,
சேலம் - 19.1
தர்மபுரி - 19.5
மதுரை - 19.8
கோவை - 20.1
கடலூர் - 20.8
திருச்சி - 21.0
புதுச்சேரி - 21.4
சென்னை - 22.0
நெல்லை - 23.4
சென்னை - 23.7
தஞ்சாவூர் - 24.0
பெங்களூர் - 15.4
ஓசூர் - 15.6
பெங்களூரு - 16.5
என வெப்பநிலை பதிவாகியுள்ளது. மழையை பொறுத்தவரை சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை சென்னை தொடங்கி, கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். அதேநேரம் வெப்பநிலையும் இந்த நாட்களில் அதிகரிக்கும். இது சாதாரண மழையாகத்தான் இருக்கும். இருப்பினும் மழைக்கு முன்னர் அறுவடையை விவசாயிகள் முடித்துக்கொள்ள வேண்டும்" எனறு கூறியுள்ளார்.
அதேபோல மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18-01-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
19-01-2025: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
20-01-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21-01-2025 மற்றும் 22-01-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
23-01-2025: தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: இன்று (17-01-2025); வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications