மழை பெய்ய என்ன காரணம்? மே 12ல் மேலடுக்கு சுழற்சி! வெதர்மேன் குட் நியூஸ்! இனி ஊட்டிக்கு வேண்டாம்!
சென்னை: தமிழகத்தில் வரும் மே 12 அல்லது 13 ஆம் தேதி காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி உருவாகும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் நல்லதொரு செய்தியை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் சன் நியூஸ் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வெப்ப அலை படிப்படியாக குறையும். மே 5 ஆம் தேதி வரை தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் வடதமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் வெப்ப அலை இருந்ததை பார்த்தோம்.

ஆனால் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே உள் மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதுவும் ஒரு காரணமாக சொன்னாலும் வரும் நாட்களில் மேலடுக்கு சுழற்சி, இலங்கைக்கு அருகேயோ அல்லது குமரி கடலுக்கு அருகேயோ உருவாக வாய்ப்பிருக்கிறது.
தரை காற்று வீசுவது நின்றுவிட்டு கடலில் இருந்து கிழக்கு திசையிலிருந்து காற்று வீசுகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்படும். இன்று சென்னையில் ஆங்காங்கே மழை பெய்வதை பார்த்தோம். மழை மேகங்களும் கடல் பகுதியில் இருந்து உள்ளே வருவதையும் பார்த்தோம்.
கிழக்கிலிருந்து காற்று வீசும் போது அது வறண்ட காற்றாக இல்லாமல் ஈரப்பதம் கொண்ட காற்றாக இருக்கும். இதனால் வெப்பத்தின் தாக்கமும் குறைந்து காணப்படும். மழை பெய்வது மற்றும் கிழக்கு காற்று ஆகிய இரு காரணங்களால் வெப்பம் குறைந்து காணப்படும்.
இனி சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்யும். உள்மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மழையின் தாக்கத்தை பார்க்கிறோம். மேற்கு தொடர்ச்சி பகுதியை ஒட்டிய உள் மாவட்டங்களான தேனி, விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்.
12 ஆம் தேதி அல்லது 13 ஆம் தேதிக்கு பிறகு மேலடுக்கு சுழற்சி உருவான பிறகு கடலோர மாவட்டங்கள், தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சென்னை ஆகிய இடங்களில் படிப்படியாக மழை அதிகரிக்கும். இந்த மழை ஆங்காங்கே இல்லாமல் பரவலாக பெய்யும். மேலடுக்கு சுழற்சி உருவானது மே 21, 22 ஆகிய தேதிகளில் பரவலான மழை பெய்யும்.
வழக்கம் போல் மே இறுதியில் கடைசி வாரத்தில் காற்றழுத்தமோ புயல் சின்னமோ உருவாகி தென் மேற்கு பருவமழை வங்கக் கடலில் உருவாவதை பார்க்கிறோம். இந்த ஆண்டும் மே 12 இல் உருவாகும் மேலடுக்கு சுழற்சியின் தாக்கம் மே 21,22 வரை இருக்கக் கூடும்.
எனவே இந்த மாதம் இறுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி அது புயலாக மாற வாய்ப்புள்ளது. அது மாதிரியாக வங்கக் கடலில் புயல்கள் உருவானால் மீண்டும் தரைக் காற்று வீசக் கூடும். அந்த நேரத்தில் மழை குறைந்து வெப்பம் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அடுத்த இரு வாரங்களுக்கு வெப்பம் குறைந்தே காணப்படும்.
மே 24 க்கு பிறகு புயல் சின்னம் உருவானால் வெப்பம் அதிகரிக்கும். பொதுவாக ஏப்ரல் மாதம் மழை பெய்யும். ஆனால் உள் மாவட்டங்களில் மழை இல்லை. இதனால் வெப்பம் இந்த ஆண்டு அதிகமாகவே இருந்தது. 1997, 1998, 2002, 2003, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் எல் நினோ ஆண்டாக இருந்ததால் வெப்பம் அதிகமாகவே இருந்தது. இந்த ஆண்டு ஒரே மாதிரியான வெப்பத்தை 10, 20 நாட்களாக பார்த்தோம்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் போது நமக்கு மழை கிடைக்கும். காவிரி நீர் பிடிப்பு பகுதிகள், வால்பாறை, பரம்பிக்குளம், கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய இடங்களில் பருவமழை கிடைக்கும். மற்ற இடங்களில் எல்லாம் தமிழகத்தை பொருத்தமட்டில் வெப்ப சலன மழை பெய்யும். காலையில் வெயிலாக இருக்கும், மாலை அல்லது இரவு நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். இவ்வாறு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications