பிச்சு உதறப்போகும் மழை! இது சீசனே இல்லை.. இருந்தாலும் கனமழைக்கு ரெடியா இருங்க - வெதர்மேன் வார்னிங்
சென்னை: நேற்று கொங்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்திருந்தது. இந்நிலையில் இன்றும் மழை நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
இது குறித்து தனது x பக்கத்தில் அவர் ஷேர் செய்திருப்பதாவது, "தென் தமிழகம் மற்றும் கொங்கு மண்டலத்திற்கு நேற்று சிறந்த நாளாக அமைந்தது. இன்றும் மழை பெய்யும், ஆனால் நேற்று போல் பரவலாக இருக்காது. திண்டுக்கல், திருப்பூர் மண்டலங்களுக்கும் ஓரளவுக்கு மிதமான மழை பெய்யும்.

இன்று கன்னியாகுமரியில் மீண்டும் இடியுடன் கூடிய மழை பெய்யும். தென்காசி, நெல்லை, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் மற்றும் ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கோவை மண்டலங்களில் உள்ள கொங்கு மண்டலத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்" என தெரிவித்திருக்கிறார்.
திடீர் மழை ஏன்?
இந்திய பெருங்கடல் பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில், உருவாகியிருக்கும் வளிமண்டல சுழற்சி கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியிருந்தது. இந்த தாழ்வு பகுதிதான் தற்போது மழைக்கு காரணம். வழக்கமாக பிப்ரவரியில் மழை பெய்யாது. இருப்பினும் கடலில் ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்றும் தொடரும் என்பதால், கொங்கு மாவட்ட மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
சென்னை வானிலை மையம் சொன்னது என்ன?
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மழை குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது. நேற்று மதியம் வெளியாகியிருந்த அறிவிப்பில், "இன்று தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
27 மற்றும் 28ம் தேதிகளில் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில், லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மார்ச்.1 முதல் 3 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
பனிமூட்டம் பற்றிய முன்னறிவிப்பு
இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம் மாவட்டங்களில் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னைக்கு வார்னிங்
இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி












Click it and Unblock the Notifications