கள்ளக்குறிச்சி ஆய்வுக்கு இடையே.. சட்டென திரும்பிய ஸ்டாலின்! அங்கே கவனம் போக.. சட்டென எழுப்பிய கேள்வி

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளிடம் முக்கியமான சில விசாரணைகளை மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 23 இடங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ, விழுப்புரம் மாவட்டம் கெடாரில் 42 செ.மீ, தருமபுரி மாவட்டம் அரூரில் 33 செ.மீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தலில் 32 செ.மீ, திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் 23 செ.மீ. மழை பதிவு பெய்துள்ளது.

weather tamilnadu weatherman summer weather news

நீலகிரியில் இன்னும் மழை நிற்கவில்லை. குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் அய்யனம்பாளையம் கிராமத்தை சுற்றியுள்ள 600க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ரப்பர் படகுகள் மூலம் பொதுமக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலையில் நேற்று வீடுகள் மீது பாறை சரிந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம் அடைந்து உள்ளது. குறுகலான பாதை என்பதால் ஜேசிபி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மரத்தை அறுக்கும் இயந்திரம் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டின் மேற்கூரை உள்ளிட்டவை அப்புறப்படுத்தப்பட்டன.

கடலூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் கோரத்தாண்டவம் ஆடி உள்ளது. திடீர்குப்பம், குண்டுசாலை, செம்மண்டலம், வெளிச்செம்மண்டலம், சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் இடையே உள்ள ரயில்வே பாலத்திற்கு கீழ் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எழுப்பூரில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக புறப்பட இருந்த சோழன், தேஜஸ், குருவாயூர், வைகை, பல்லவன் உள்ளிட்ட பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மதுரை, ராமேஸ்வரம், செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து நேற்றிரவு புறப்பட்ட ரயில்கள் விழுப்புரம் -> காட்பாடி -> அரக்கோணம் மார்க்கமாக எழும்பூருக்கு இயக்கப்படுகின்றன. கடைசி நேரத்தில் எதிர்பாராத விதமாக ரயில்கள் ரத்து. செய்யப்பட்டு உள்ளன. பாதை மாற்றம் செய்யப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆய்வு: இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அங்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். நிவாரண பணிகளை மேற்கொள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மாநில பேரிட மீட்புப் படையினர் அங்கே மக்களை மீட்டு முகாமிற்கு அழைத்து சென்று வருகின்றனர். அப்போது முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளிடம் முக்கியமான சில விசாரணைகளை மேற்கொண்டார்.

அதிகாரிகளிடம் மின்சாரம் எப்போது வரும் என்பது தொடர்பாக ஆய்வு செய்தார். அவர் ஆய்வு மேற்கொண்ட பகுதியில்.. டிரான்ஸ்பார்மர் வெடித்து இருந்தது. இதனால் அதை மாற்றும் பணிகள் நடந்து கொண்டு இருந்தன. அப்போது முதல்வர் ஸ்டாலின் அதை பற்றி விசாரித்தார். எத்தனை மணி நேரத்தில் மின்சாரம் வரும்.. அங்கே என்ன பணிகள் போய்க்கொண்டு இருக்கிறது என்று அருகே இருக்கும் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அதன்பின் முடிந்த அளவு உடனே மின்சாரம் வழங்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+