அலர்ட்! தமிழ்நாட்டில் வரும் நாட்களில் கிளைமேட் எப்படி! சென்னையில் மழை இருக்குமா! வானிலை மையம் தகவல்
சென்னை: சென்னையில் இந்த மாதம் நல்ல மழை பெய்த நிலையில், வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட் கொடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே பல இடங்களில் பலத்த மழை பெய்து வந்தது. அதிலும் குறிப்பாக ஹிமாச்சல் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் சில வாரங்களாகக் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதிகளில் இருக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இருப்பினும், தமிழ்நாட்டில் பெரியளவில் மழை இல்லாமலேயே இருந்தது. சில நாட்கள் மழை பெய்தாலும் கூட பெரும்பாலான நாட்கள் இங்கே மழை இல்லாமல் வறண்ட வானிலையே நிலவி வந்தது. வெயிலும் அதிகமாகவே இருந்து வந்தது. அவ்வப்போது மட்டுமே சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
வானிலை ஆய்வு மையம்: இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது. அதன்படி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல நாளைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல ஆகஸ்ட் 27ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஆகஸ்ட் 28 முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை கிளைமேட்: தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே காணப்பட்டது. தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மட்டுமே கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளது. அதன்படி கடலூர் வானமாதேவி பகுதியில் 20 மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல லப்பைக்குடிகாடு, லக்கூர், வேப்பூர் ஆகிய பகுதிகளிலும் தலா 10 மிமீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது..
கேரளாவுக்கு போறீங்களா? வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கையை பாருங்க.. 2 மாதத்திற்கு இதுதான் நிலை
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications