Agni: அக்னி நட்சத்திரம் எப்போது? 25 நாட்கள் கத்திரி வெயிலின் தாக்கம் எப்படியிருக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி தொடங்குகிறது. இது மே 28ஆம் தேதி வரை முடிவடைகிறது. இதனால் வெப்பநிலை சராசரியை விட 2 முதல் 4 டிகிரி வரை உயரக் கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

agni natchathiram

ஆண்டுதோறும் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை கோடை வெயில் கொளுத்தி எடுக்கும். அப்போது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலும் 24 நாட்கள் இருக்கும். இதனால் வெயிலின் தாக்கம் கோடை வெயிலை விட அதிகமாக இருக்கும்.

ஏற்கெனவே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக மதுரை, சென்னை, திருச்சி, வேலூர் உள்ளிட்ட இடங்களில் இயல்பை காட்டிலும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது.

மேலும் சில பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கோடை வெயிலின் போது ஆங்காங்கே குளிர்ச்சியாக மழையும் பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் 2 முதல் 4 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த ஆண்டு கத்திரி வெயில் என்பது மே 4ஆம் தேதி முதல் மே 28ஆம் தேதி வரை நீடிக்கும். இந்த சமயத்தில் வழக்கத்தை விட வெயில் 2 முதல் 4 டிகிரி அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் அக்னி நட்சத்திரத்தின் போது மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.

இதற்காக பழச்சாறுகள், குளிர்பானங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில் அவசியமில்லாமல் வெயில் செல்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் குடை எடுத்துக் கொண்டு செல்லலாம். மாலை 4 மணிக்கு மேல் வெளியே செல்லலாம்.

கடந்த முறை அக்னி வெயில் தொடங்கியதும் ஓரிரு நாட்களில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வெப்பத்தை தணித்தது. பெரும்பாலான இடங்களில் அக்னி வெயிலே என்னவென தெரியாத அளவிற்கு மழை மக்களை மகிழ்வித்தது. ஆனால் இந்த முறை அது போல் நிகழும் என்பது போக போகத்தான் தெரியும்.

மழை பெய்ய வேண்டும் என்றால் வெப்பசலனம், மேலடுக்கு, கீழடுக்கு சுழற்சி உள்ளிட்டவைகளால் மட்டும் இது சாத்தியமாகும். கடந்த முறையை போல் இந்த முறையும் அதிர்ஷ்ட காற்று நம் பக்கம் வீசுகிறதா என்பதை பார்க்கலாம்.

சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலமான அக்னிநட்சத்திரம் என்ற கத்திரி வெயில் எனப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை மாதம் 21ஆம் தேதி தொடங்கி, வைகாசி 14ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது.

சூரியன் பயணம் சித்திரை மாதம் மேஷம் ராசியில் தொடங்கி பங்குனி மாதம் மீனம் ராசியில் முடிகிறது. மே மாதம் மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் பயணத்தை தொடங்கும் சூரியன், பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்திற்குள் சூரியன் நுழையும் காலம் முதல் ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதம்வரை சூரியன் சஞ்சரிக்கும் கால அளவினை அக்னி நட்சத்திர காலம் என்கின்றனர்.

சூரியன் வெப்பம் தகிக்கும் இந்த கால கட்டத்தை கத்திரி வெயில் காலம் என்றும் கூறுகின்றனர். இது தோஷகாலமாக கருதப்படுகிறது. எனவேதான் இந்த கால கட்டத்தில் சுப நிகழ்ச்சிகள் செய்வதை தவிர்த்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+