வங்கக்கடலில் வலிமை அடைந்த தாழ்வு மையம்.. இப்போ எங்கே இருக்கு? சென்னைக்கு அருகே எப்போது வரும்?
சென்னை: வங்கக்கடலில் தாழ்வு கொண்டு இருக்கும் மையம் தற்போது வலிமை அடைந்து வருகிறது. எதிர்பார்க்க முடியாத அளவிற்கு தாழ்வு மையம் கொஞ்சம் கொஞ்சமாக வலிமை அடைந்து வருகிறது.
சற்று நேரத்திற்கு முன் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த 2 நாட்களில் புதுச்சேரி, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் தமிழ்நாட்டில் மழை தீவிரம் அடைந்து உள்ளது. இது இனி கொஞ்சம் கொஞ்சமாக சென்னை, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா நோக்கி நகரலாம். இதனால் இன்று பெய்ய வேண்டிய மிக கனமழை நாளை பெய்யும். அதாவது இன்றும் மழை பெய்யும். ஆனால் ரெட் அலர்ட் அளவிற்கு பெய்யுமா என்பது சந்தேகம்தான். அடுத்த 2 நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலிமை அடையும்.
எப்போது சென்னைக்கு வரும்?: இந்த தாழ்வு மையம் சென்னைக்கு அருகே நாளை மாலை நேரத்தில் வரலாம். நாளை மாலை நேரத்தில் சென்னைக்கு அருகே நின்று மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.
தற்போது தாழ்வு மையம் எங்கே உள்ளது என்று இங்கே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது. தற்போது இலங்கைக்கு வடகிழக்கு பகுதியில் இந்த தாழ்வு மையம் உள்ளது. இந்த தாழ்வு மையம் காரணமாக மேகங்கள் பேண்ட் பேண்ட்டாக வர தொடங்கி உள்ளது. மொத்தமாக மேகம் வராமல்.. கொஞ்சம் கொஞ்சமாக வர தொடங்கி உள்ளது. சென்னையில் இருந்து 360 கிமீ தூரத்திற்கு அதிகமான தூரத்தில் இந்த தாழ்வு மையம் உள்ளது.
இதுவரை மழை மிக தீவிரம் அடையவில்லை என்றாலும் போக போக தீவிரம் அடையும். வானிலை வல்லுனர்கள் எதிர்பார்த்ததை விட குறைவான வேகத்தில் தாழ்வு மண்டலம் வலிமை அடைவதே மழை வேகம் எடுக்காமல் போனதற்கு காரணம். சென்னைக்கு அருகே இந்த தாழ்வு மையம் நின்று விளையாடும் வாய்ப்புகள் உள்ளன.
வானிலை: சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பெய்ய உள்ள மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் அடுத்த கட்ட கனமழை பெய்து உள்ளது. அடுத்த கட்டமாக மழை மேகங்கள் சென்னையை நோக்கி நகர தொடங்கி உள்ளன. இப்போதுதான் ரெடியாகி வருகிறது.
இன்று முழுக்க இதேபோல் இன்னும் பல மழை மேகங்கள் வந்த வண்ணமும், போன வண்ணமும் இருக்கும். நாளை வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாட்டிற்கு நெருக்கமாக.. சென்னைக்கு மிக அருகே வரும் வாய்ப்புகள் உள்ளன என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சற்று நேரத்திற்கு முன் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த 2 நாட்களில் புதுச்சேரி, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications