10 கிமீ வேகத்தில் நகரும் டானா புயல்.. எப்போது முழுமையாக கரையை கடக்கும்.. வானிலை மையம் விளக்கம்
புவனேஸ்வர்: வங்கக்கடலில் உருவான டானா புயல் 10 கிலோமீட்டர் வேகத்தில் மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் சூறைகாற்றுடன் ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையை கடந்து வருகிறது. நேற்று நள்ளிரவு இந்த புயல் கரையை கடக்க தொடங்கியது. இந்நிலையில் தான் புயல் எப்போது முழுவதுமாக கரையை கடக்கும்? என்பது பற்றி இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதன்பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்று ‛டானா' புயலாக மாறியது. இந்த புயல் தீவிர புயலாக நேற்று மாறியது. இந்த ‛டானா' புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதேவேளையில் ‛டானா' புயல் ஒடிசாவின் பூரி மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் சாகர் தீவுகளுக்கு இடையே இன்று அதிகாலை கரையைக் கடக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதோடு புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100 கி.மீ. முதல் 120 கி.மீ. வரை காற்று வீசும் என்றும் எச்சரிக்கை செய்தது.
அதன்படி நள்ளிரவு 12.20 மணிக்கு டானா புயல் கரையை கடக்க தொடங்கியது. மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதுடன் புயல் கரையை கடந்து வருகிறது. இந்த புயல் காரணமாக ஒடிசாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஒடிசாவின் ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ரக் மற்றும் பால்சோட் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக பத்ரக் மாவட்டத்தின் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மேற்கு வங்க மாநிலத்திலும் சில இடங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. ஆனாலும் கூட தற்போது வரை அதிர்ஷ்டவசமாக ஒடிசா, மேற்கு வங்க மாநிலத்தில் பெரிய அளவில் பாதிப்பு என்பது ஏற்படவில்லை. ஒடிசாவில் மட்டும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடலில் 1 மீட்டர் முதல் அதிகபட்சமாக 2 மீட்டர் உயரத்துக்கு அலைகள் வீசுகின்றன. இதற்கிடையே தான் புயல் கரையை கடக்கும் பாதை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் புயல் எங்கு உள்ளது? அது எப்போது முழுவதுமாக கரையை கடக்கும்? என்று இந்திய வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் மனோரமா மொகந்தி இன்று அதிகாலை 6 மணியளவில் கூறுகையில், ‛‛டானா புயல் ஒடிசாவின் தாம்ராவில் இருந்து வடக்கே 15 கிலோமீட்டர் தொலைவிலும், பிடர்கனிகாவிற்கு வடமேற்கில் 30 கிலோமீட்டர் தொலைவிலும்உள்ளது. தீவிர புயலாக கரையை கடந்து வரும் டானாவால் காற்றின் வேகம் என்பது 100 முதல் 110 கிலோமீட்டர் என்ற அளவில் உள்ளது. கரையை கடக்கும் நிகழ்வு என்பது இன்னும் 1 முதல் 2 மணிநேரம் வரை நடக்கும். இது வடக்கு ஒடிசாவில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிலக்க உள்ளது'' என கூறியுள்ளார்.
அதேபோல் இந்திய வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛டானா புயல் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஒடிசாவில் தாம்ராவுக்கு வடக்கு வடமேற்கு திசையில் 20 கிலோமீட்டர் தொலைவிலும், ஹபலிகட்டி இயற்கை முகாமிற்கு(பிதர்கானிகா) வடக்கு வடமறே்க திசையில் 40 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. புயல் கரையை கடக்கும் நிகழ்வு தற்போது நடந்து வருகிறது. கரையை கடக்கும் நிகழ்வு என்பது இன்னும் 1 முதல் 2 மணிநேரம் வரை நடக்கும். அதன்பிறகு புயல் ஒடிசாவில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications