கரையை கடக்க தொடங்கிய ‛ரெமல்’ புயல்.. கொல்கத்தாவில் கொட்டும் அதி கனமழை! 1 லட்சம் பேர் வெளியேற்றம்
டெல்லி: வங்கக்கடலில் உருவான ரெமல் புயல் கரையை கடக்க தொடங்கி உள்ளது. மணிக்கு 110 கிலோமீட்டர் முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்து வரும் நிலையில் சூறைக்காற்றுடன் கொல்கத்தா மற்றும் அதனை சுற்றிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் 1 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் இன்னும் 2 மணிநேரத்தில் புயல் முழுமையாக கரையை கடக்க உள்ளது.
மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று காலை 5.30 மணி அளவில் வலுப்பெற்றது. அதன்பிறகு நேற்று இரவில் புயலாக உருவானது.

இந்த புயல் தீவிர புயலாக மாறி இன்று நள்ளிரவில் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதாவது வங்கதேசத்தின் கேப்புப்பாராவுக்கும் மேற்கு வங்கம் சாகர் தீவுக்கும் இடையே கரையை கடக்கக் கூடும். இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம், ‛‛ரெமல் புயல் அதி தீவிர புயலாக மாறி உள்ளது. இந்த புயல் மேற்கு வங்க மாநிலத்தின் சாகர் தீவுகளுக்கு தெற்கு-தென்கிழக்கே 240 கிமீ மற்றும் கேனிங்கிலிருந்து தென்-தென்கிழக்கே 280 கிலோமீட்டர் தொலைவிலும் கரையை கடக்கும். கரையை கடக்கும்போது மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் இன்னும் சற்று நேரத்தில் புயல் கரையை கடக்க உள்ளது. புயல் கரையை நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக இரவு 8.49 மணிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‛‛அதிதீவிர புயலாக மாறியுள்ள ரெமல் வடக்கு வங்கக்கடலில் இருந்து வடக்கு நோக்கி நகர தொடங்கி உள்ளது.
இந்த புயல் சாகர் தீவுகளில் 130 கிலோமீட்டர் கிழக்கு - தென்கிழக்கு, வங்கதேசத்தின் கேப்புப்பாராவில் இருந்து 140 கிலோமீட்டர் தென்மேற்கு, மேற்கு வங்கத்தின் கேன்னிங் பகுதியில் இருந்து 140 கிலோமீட்டர் தெற்கு- தென்கிழக்கு மற்றும் மாங்கல்லாவில் இருந்து 160 முதல் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் வங்கதேசம் - மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க உள்ளது. இந்த சமயத்தில் 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்பிறகு நள்ளிரவு 1.24 மணிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், ‛‛அதிதீவிர புயலாக மாறி உள்ள ரெமல் மேற்கு வங்கத்தின் கன்னிங்கில் இருந்து தெற்கு பகுதியில் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளத. இந்த பயல் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்க கடற்கரை இடையே கரையை கடக்க உள்ளது. இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழநக்க உள்ளது. இந்த புயல் அடுத்த 2 மணிநேரத்தில் முழுவதுமாக கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‛ரெமல்' புயல் கரையை கடக்க தொடங்கி உள்ளதால் மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே ‛ரெமல்' புயல் முழுவதுமாக கரையை கடக்கிறது. புயல் கரையை கடக்க தொடங்கி உள்ளதால் கொல்கத்தா மற்றும் அதனை சுற்றிய இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்கிறது. இதனால் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்த விழுந்துள்ளன. மேலும் கொல்கத்தாவில் இந்த புயலால் அதிக பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த புயலால் வங்கதேசம், இந்தியாவின் மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் புயலையொட்டி அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கம் உள்ளிட்ட பல இடங்களில் 1 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications