அடுத்த 2 மணி நேரம்.. தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?.. முழு விவரம் இதோ
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே குளு குளு காலநிலை நிலவி வருகிறது. பகலில் வெயிலான கால நிலையும் நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்றைய தினம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நிறைவடைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை முழுமையாக நிறைவடைந்துவிட்டது. மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் குளிர்ச்சியான வானிலையே நிலவியது. கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 1 ஆம் தேதிவரை தமிழ்நாடு முழுவதும் சுமார் 235.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த நாட்களில் இயல்பாக 89.2 மி.மீதான் மழை பதிவாகி இருக்க வேண்டும்.

ஆனால், தமிழகத்திற்கு இயல்பை விட 164 சதவீதம் மழை அதிகமாகப் பெய்துள்ளது. ஜனவரி மாத தொடக்கத்துக்குப் பின்னர் மழையளவு பெரும்பாலான பகுதிகளில் குறைந்து குளிர்ச்சியான காலநிலை மட்டுமே நிலவி வந்தது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
மழை சற்று தணிந்த நிலையில் தற்போது வெயில் வாட்டி வதைக்கிறது. அதிகாலை, இரவு நேரங்களில் பனிப்பொழிவும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், அடுத்த இரண்டு மணி நேரங்களுக்கு தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லோசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30″ செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications