சென்னையில் இருந்து.. எவ்வளவு தூரத்தில் உள்ளது டானா புயல்.. என்ன நடக்க போகிறது இனி? கவனம்
சென்னை: மத்திய கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இந்த தாழ்வு மண்டலமானது நாளை மேலும் வலிமை அடையும். தற்போது சென்னையில் இருந்து 1100 கிலோ மீட்டர் தூரத்திற்கு போர்ட் பிளேயருக்கு வடக்கே உள்ளது.
மேற்கு வங்கத்தில் இருந்து தெற்கில் 300 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த தாழ்வு மண்டலம் உள்ளது.மத்திய கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் நேற்று காலை (அக்.21) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. பலத்த சேதத்தை டானா புயல் ஏற்படுத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.
வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
22.10.2024:தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
23.10.2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள்; நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
24.10.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
காற்று மோசமாகும்: இந்த புயல் காரணமாக காற்று மிக வேகமாக வீசும். கரையை கடக்கும் போது 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு இடையே காற்று வேகம் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இன்று காலை (அக்.22) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதையடுத்து நாளை மத்திய கிழக்கு வங்கக் கடலில் புயலாக மாறி ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் இந்த தாழ்வு பகுதி அக்.24இல் மேற்குவங்கம், ஒடிசா கடற்கரையையொட்டி 'டானா' புயல் கரையை கடக்கக்கூடும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
ஆனால் இது ஒடிசா, மேற்குவங்கம் நோக்கி நகர்வதால் தமிழ்நாட்டில் எந்த தாக்கமும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒடிசாவில் புரி அருகே இந்த புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.












Click it and Unblock the Notifications