காற்றழுத்த தாழ்வு மையத்தின் ரூட் என்ன? சென்னையில் எங்கே கரையை கடக்கும்? வானிலை மையம் வார்னிங்
சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ள பகுதிகளின் வழித்தடத்தை வெளியிட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இன்று வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

அலர்ட்: இன்று மஞ்சள் அலர்ட் தரப்பட்ட மாவட்டங்கள்: பெரம்பலூர், சேலம், தருமபுரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர் , அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகபட்டினம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
இன்று ஆரஞ்சு அலர்ட் தரப்பட்ட மாவட்டங்கள்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
16ம் தேதி மஞ்சள் அலர்ட் தரப்பட்ட மாவட்டங்கள்: பெரம்பலூர், சேலம், தருமபுரி, , கிருஷ்ணகிரி, வேலூர் , அரியலூர், காரைக்கால் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்
16ம் தேதி ஆரஞ்சு அலர்ட் தரப்பட்ட மாவட்டங்கள்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
மழை அதிகம்: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 84% அதிகம் பெய்துள்ளது. சென்னையில் 81% அதிகம் மழை பெய்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே கரையை கடக்க வாய்ப்புள்ள பகுதிகளின் வழித்தடத்தை வெளியிட்டுள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மையம் கொண்டுள்ள நிலையில், 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள நிலையில், சென்னையை நோக்கி மேக கூட்டங்கள் நகர தொடங்கி உள்ளன.
சென்னை நரசிங்க புரம் வழியாக இந்த தாழ்வு மையம் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த தாழ்வு மையம் சென்னைக்கு அருகே நாளை மாலை நேரத்தில் வரலாம். நாளை மாலை நேரத்தில் சென்னைக்கு அருகே நின்று மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன.
தற்போது தாழ்வு மையம் எங்கே உள்ளது என்று இங்கே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது. தற்போது இலங்கைக்கு வடகிழக்கு பகுதியில் இந்த தாழ்வு மையம் உள்ளது. இந்த தாழ்வு மையம் காரணமாக மேகங்கள் பேண்ட் பேண்ட்டாக வர தொடங்கி உள்ளது. மொத்தமாக மேகம் வராமல்.. கொஞ்சம் கொஞ்சமாக வர தொடங்கி உள்ளது. சென்னையில் இருந்து 360 கிமீ தூரத்திற்கு அதிகமான தூரத்தில் இந்த தாழ்வு மையம் உள்ளது.
வானிலை வல்லுனர்கள் எதிர்பார்த்ததை விட குறைவான வேகத்தில் தாழ்வு மண்டலம் வலிமை அடைவதே மழை வேகம் எடுக்காமல் போனதற்கு காரணம். சென்னைக்கு அருகே இந்த தாழ்வு மையம் நின்று விளையாடும் வாய்ப்புகள் உள்ளன.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications