Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிச்சு உதற போகுது கனமழை! இந்த 5 மாவட்டங்களில் நான்-ஸ்டாப் மழை தான்! எச்சரிக்கும் வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும். எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து வானிலை மையம் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை உட்பட பல இடங்களில் குளிர்ச்சியான வானிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

 Which of the tamilnadu districts will get rain alerts Chennai meteorological dept

இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைச் சென்னை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.

மிதிலி புயல்: நேற்று (16-11-2023) மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (17-11-2023) காலை 0530 மணி அளவில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 'மிதிலி' புயலாக வலுப்பெற்று, காலை 0830 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பரதீப்பிலிருந்து (ஒரிசா) சுமார் 250 கிலோ மீட்டர் கிழக்கு-வடகிழக்கே டிகாவிலிருந்து (மேற்கு வங்கம்) சுமார் 180 கிலோ மீட்டர் கிழக்கு-தென்கிழக்கே, கேப்புபாராவிலிருந்து (வங்கதேசம்) சுமார் 180 கிலோ மீட்டர் தென்மேற்கே நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (17-11-2023) இரவு வங்கதேச கடற்கரையை கேப்புபாராவிற்கு அருகில் கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

வானிலை எப்படி: இதன் காரணமாக இன்று (நவ. 17) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அதேபோல நாளை (நவ. 18) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை மறுநாள் (நவ. 19) கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் நாட்களில் வானிலை: மேலும், வரும் நவ, 20ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ, 21ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வரும் நவ, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை: தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் நாலுமுக்கு (திருநெல்வேலி) 100 மிமீ மழை பெய்துள்ளது, ஊத்து (திருநெல்வேலி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி) தலா 90 மிமீ மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடலோரப் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும், மாலை முதல் காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு படிப்படியாகக் குறைந்து மாலை முதல் இரவு வரை மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளைய தினம் நவ. 18 காலை வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாகக் குறையக்கூடும். அதேபோல மேற்குவங்க கடலோரப் பகுதிகளில் நவ.17ஆம் தேதி நள்ளிரவு வரை சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாகக் குறையக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+