சென்னைக்கு மட்டும் ஏன் இப்படி.. பதிவானது 35 டிகிரி.. ஆனா 51 டிகிரி மாதிரி எரியுதே! என்ன காரணம்
சென்னை: ஒவ்வொரு நாளும் வானிலை அறிக்கையில் அதிகபட்சம் வெப்பம் பதிவான இடங்களில் சென்னை வராவிட்டாலும் சென்னைவாசிகள் அதீத வெப்பத்தால் படும் பாடு திண்டாட்டமாகவே இருக்கிறது. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
இப்போது எல்லாம் ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலத்தில் வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. அதிலும் இந்தாண்டு நிலைமை ரொம்பவே மோசமாக இருக்கிறது என்று சொல்லலாம்.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மதிய நேரங்களில் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அரசு எச்சரிக்கும் அளவுக்கு வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.
கோடை வெப்பம்: தமிழ்நாட்டில் எப்போதும் ஏப்ரல் அல்லது மே மாதம் தான் கோடை வெப்பம் உச்சம் தொடும். ஆனால், இந்தாண்டு பிப். மாதமே பல இடங்களில் வெப்பம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. பிப். மாதமே ஈரோட்டில் ஒரு சில நாட்கள் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் பல்வேறு இடங்களிலும் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது. இப்போது பெரும்பாலான இடங்களில் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.
நேற்று கூட தமிழ்நாட்டில் மொத்தம் 17 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. குறிப்பாக பரமத்தி வேலூரில் 110.66 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோட்டில் 110.12 டிகிரி பாரன்ஹீட், திருப்பத்தூா், வேலூர், மதுரை விமானநிலையம். திருத்தணி, திருச்சியில் தலா 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது.
சென்னை வெப்பம்: ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களையும் கூட இந்தாண்டு விட்டுவைக்கவில்லை. அங்கும் வெப்பம் கணிசமாக அதிகரித்துள்ளது. பெரும்பாலும் மேற்கு மாவட்டங்கள்- ஈரோடு, திருப்பூர், கரூரில் தான் வெப்பம் அதிகமாகப் பதிவாகி வருகிறது. இவை குறித்து எல்லாம் நாம் செய்திகளில் பார்த்து இருப்போம். ஆனால், சென்னையில் அதீத வெப்பம் நிலவுவதாக வானிலை அறிக்கையில் வருவதில்லை. அங்கு 95-100 டிகிரி பாரன்ஹீட்டில் தான் வெப்பம் இருக்கிறது.

ஆனாலும், சென்னை மக்களிடம் இதைச் சொன்னால் நம்ப மாட்டார்கள். அதீத வெப்பமே நிலவுவதாகச் சொல்வார்கள். ஆனால், வானிலை ரிப்போர்ட்டில் மட்டும் ஏன் வெப்பம் குறைவாக இருப்பது போல இருக்கிறது.. ஏன் இந்த வேறுபாடு.. இதில் எது சரியானது என்பது குறித்துப் பார்க்கலாம்.
வேறுபாடு ஏன்: பொதுவாக வெப்பத்தை அளவிடும் போது பதிவாகும் வெப்பம், மக்கள் உணரும் வெப்பம் என இரண்டு இருக்கும்.. அதாவது கடலோர பகுதிகளில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் அது உடலில் உருவாகும் வியர்வையைச் சீக்கிரம் ஆவியாக விடாது. இதனால் உடலில் ஒரு வித பிசுபிசுப்பு தன்மை ஏற்படும். பொதுவாக வெப்பம் அதிகமாக இருக்கும் போது வியர்வைத் தான் நமது உடல் சூட்டைக் குறைக்க உதவும். அப்படி இருக்கும் போது வியர்வை ஆவியாகாமல் போனால் அதீத வெப்பம் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
வெப்பம் + ஈரப்பதம்: வெப்பமும் ஈரப்பதமும் சேரும் போது அது மிகக் கொடூரமாக இருக்கும் என்பதற்குச் சென்னை தான் சாட்சி. அதேநேரம் சென்னைக்கு மட்டும் இப்படி நடப்பதில்லை.. சென்னை தூத்துக்குடி எனக் கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் வெப்பம் குறைவாகப் பதிவானாலும் மக்கள் அதிக வெப்பத்தை உணர்வார்கள். மக்கள் உணரும் வெப்பத்தைத் தான் ரியல் ஃபீல் என்று குறிப்பிடுவார்கள்.
இன்று கூட சென்னையில் 95 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தான் பதிவானது. ஆனால், அது ஈரப்பதம் காரணமாக அது 122 டிகிரி பாரன்ஹீட்டை போலவே தோன்றியிருக்கிறது. இதன் காரணமாகவே கடலில் இருந்து தள்ளி இருக்கும் மாவட்டங்களில் பதிவாகும் வெப்பத்தைக் காட்டிலும் சென்னையில் குறைவான வெப்பம் பதிவானாலும் மக்கள் அதிக வெப்பத்தை உணர்கிறார்கள். இதேபோல உங்கள் ஏரியாவில் இப்போது என்ன வெப்பம் நிலவுகிறது.. ஆனால் அதை எந்தளவு வெப்பமாக நாம் உணர்கிறோம் என்பதை உங்கள் மொபைலில் இருக்கும் வெதர் செயலியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications