சென்னையை குளிர்வித்த திடீர் மழை ஏன்? தமிழக எல்லையான தடாவில் நடந்த அந்த சம்பவம்! வெதர்மேன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் திடீரென ஏன் மழை பெய்தது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். நேற்று வரை சென்னையில் வெயில் வாட்டிய நிலையில் இன்று திடீர் மழை பெய்து மக்களின் மனங்களை குளிர்வித்தது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை போன்ற கடலோர நகரங்களுக்கு ஏப்ரல் மாதத்தில் கிடைக்கும் மழை எப்போதுமே வரவேற்புக்குரியது.

Suddenly Rain in Chennai

இன்று திருப்பதியிலிருந்து நகர்ந்து வந்த புயல் மேகங்கள் வலுப்பெற்று சென்னையில் மழை பெய்தது. பொதுவாக பகல் வேளையில் புயல்கள் வலுவிழப்பது வழக்கம். ஆனால், இன்றைய தினம் அப்படியொரு நிலை காணப்படவில்லை.

இதன் காரணமாக, சென்னையின் சில பகுதிகளில் குறுகிய நேரத்தில் மிகக் கனமழை கொட்டியது. இந்த புயல் மேகங்கள் மேலும் கீழிறங்கும்போது, தென் சென்னை மற்றும் ஓ.எம்.ஆர் (OMR) சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேகே நகரில் 58 மி.மீ., மேற்கு மாம்பலம்- 50 மி.மீ., கிண்டி -51 மி.மீ., நந்தனம் - 46 மி.மீ., வெள்ளியூர்- 39 மி.மீ., தாமரைப்பாக்கம்- 39 மி.மீ. சாலிகிராமம்- 35 மி.மீ. மழையும், முகப்பேர் - 33 மி.மீ. மழை, ஸ்ரீபெரும்புதூர்- 28 மி.மீ. மழையும், நெற்குன்றம்- 26 மி.மீ., திருவான்மியூர்- 24 மி.மீ., திருநின்றவூர்- 20 மி.மீ., செம்பரம்பாக்கம் - 10 கி.மீ. மழை பெய்துள்ளது.

தென் சென்னையை தாண்டியது மேகக் கூட்டங்கள். இது தாம்பரம், ஓஎம்ஆர், ஈசிஆர்- மறைமலைநகர் பகுதிகளுக்கு மேகக் கூட்டங்கள் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில் வெதர்மேன் கூறியிருப்பதாவது: திருப்பதி அருகே அதிகாலையில் உருவான மேகக் கூட்டங்கள், எதிர்பார்த்ததைவிட வலுவிழக்காமல் நீடித்து, தற்போது தமிழக எல்லையான தடாவை நெருங்கியது.

மெதுவாக தெற்கு நோக்கி நகரும் இப்புயல், அதிகாலை நிலையின்மை மற்றும் ஈரப்பதத்தால் தீவிரமடைகிறது. சூரிய உதயத்திற்குப் பின்னரும் நீடித்தது சென்னைக்கு சாதகமான முக்கிய அம்சமாகும். போதுமான ஈரப்பதம், கடல் காற்று தொடர்பு, புதிய மழை மேக உருவாக்கம் இதற்கான பிற சாதகங்கள்.

பகல் வெப்பத்தால் பலவீனமடைவது, சரியான பாதையை விட்டு வடக்கே விலகியிருப்பது மற்றும் அடிக்கடி மாறும் அதன் வடிவம் ஆகியவையே இது சென்னைக்கு வருவதில் உள்ள பெரிய தடைகளாகும் (ஆனாலும் தற்போது வந்துவிட்டது).

இதற்கிடையே, டெல்டா மாவட்டங்களில் அதிகாலையில் பரவலான இடியுடன் கூடிய மழை பெய்து, நீண்ட காலத்திற்குப் பிறகு அங்குள்ள மக்களுக்கு பெரிதும் நிம்மதி அளித்துள்ளது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் காலை முதலே வெயில் இல்லாமல் இதமான சூழல் இருந்தது. தற்போது கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு இடியுடன் காற்று வீசுகிறது. இத்தனை நாட்களாக கோடை வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு தற்போது இந்த குளுகுளு மழை இதமாக உள்ளது.

மயிலாப்பூர், மந்தைவெளி, அடையார், ஆர்ஏ புரம், பட்டினம்பாக்கம், ஆவடி, அம்பத்தூர், அசோக்நகர், நுங்கம்பாக்கம், போரூர், ஈக்காட்டுத்தாங்கல், மேற்கு மாம்பலம், திருமுல்லைவாயில், பூந்தமல்லி, வில்லிவாக்கம் திருவேற்காடு, தாம்பரம், முகப்பேர், நொளம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+