முதலில் சென்னை.. இப்போது தென்தமிழகம்.! அதிதீவிர கனமழை நிகழ்வுகள் அதிகரிப்பது ஏன்? பரபர தகவல்
சென்னை: இம்மாத தொடக்கத்தில் சென்னை, இப்போது தென்தமிழகத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற மோசமான வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நடப்படு ஏன் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இம்மாத தொடக்கத்தில் மிக்ஜாம் புயல் காரணமாகக் கனமழை கொட்டியது. இதனால் ஒட்டுமொத்த சென்னையில் நீர் தேங்கியது. சென்னையில் நீர் வடியவே சில நாட்கள் ஆனது.

மிக்ஜாம் புயல் சென்னைக்கு அருகே கரையைக் கடக்கவில்லை என்ற போதிலும், சென்னைக்கு அருகே வந்த போது அது மிக மெதுவாக நகர்ந்ததே குறுகிய காலத்தில் மழை கொட்டி தீர்க்க காரணமாகும்.
கொட்டும் மழை: கிட்டதட்ட சென்னையில் கொட்டிய கனமழையைப் போலவே இப்போது தென்தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாகக் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் இந்த மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் பல ஊர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இப்போது மழை ஓய்ந்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகிறது.
அதேநேரம் இப்படி அடிக்கடி குறுகிய நேரத்தில் அதீத கனமழை மழை பெய்யும் நிகழ்வுகளும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே இதுபோன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரிக்க என்ன காரணம் என்பதை வல்லுநர்கள் விலக்கியுள்ளனர். புவி வெப்பமடைதல் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், வானிலை மோசமடைய அதுவே காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அபாயம்: பருவமழை காலத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வளி மண்டல சுழற்சி ஆகியவை இயல்பாக ஏற்படும். இதனால் அதைச் சுற்றிய பகுதிகளில் மழையும் இருக்கும். இது இயல்பானது தான். ஆனால், புவி வெப்ப மயமாதல் காரணமாக மழை மற்றும் வெயில் என இரண்டுமே அதி தீவிரமாக ஏற்படத் தொடங்கியுள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
காரணங்கள்: இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், "புவி வெப்பமடைதல் நமது உலகில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதனால் பருவமழை எவ்வளவு காலம் பெய்கிறது, எந்தளவுக்குப் பெய்கிறது என்பதிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுகிறது. நிலம் மற்றும் கடலில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.. இதனால் காற்றால் ஈரப்பதத்தை நீண்ட நேரம் வைத்திருக்க முடிகிறது. இதுவே அதிகளவில் மழை பெய்யக் காரணமாக இருக்கிறது" என்றார்.
இந்தியாவில் இதற்கு முன்பும் சில முறை குறைந்த நேரத்தில் அதிக மழை கொட்டியுள்ளது என்ற போதிலும், இந்தாண்டு அடிக்கடி நடந்துள்ளது. இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் பெய்த மழையால் ஹரியானா, இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் தீவிர கனமழை கொட்டியது. இம்மாத தொடக்கத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக மழை பெய்த நிலையில், இப்போது தென்தமிழகத்திலும் பல மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆய்வாளர்கள் சொல்வது என்ன: இந்தாண்டு இந்தியாவில் தீவிர கனமழை கொட்டுவது தொடர்பாக வல்லுநர்கள் மேலும் கூறுகையில், "முதல் காரணம் எல் நினோ.. இது பூமியின் வெப்பத்தை அதிகரிக்கிறது. இரண்டாவதாகக் காட்டுத் தீ உலகின் பல பகுதிகளிலும் அதிகரித்தால் கார்பனை வெளியேறுவது மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
அடுத்து அரேபியக் கடல் ஜனவரியில் இருந்து வழக்கத்திற்கு மாறாக வெப்பமடைந்தது. கடைசியாக, மேல்-நிலை சுழற்சி முறையும் வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது. இதனால் குறுகிய பகுதியில் மேற்பரப்பு சுழற்சி அதிகமாகிறது. இவை அனைத்தும் சேர்ந்து தான் கனமழையை அதிகரித்துள்ளது.
சமீப ஆண்டுகளில் பருவ காலங்களில் பெய்யும் மழையின் அளவு அதிகரித்துள்ளதைப் பல ஆய்வுகள் உறுதி செய்கிறது. இதை பல்வேறு ஆய்வுகளும் உறுதி செய்துள்ளது. மேலும், பூமியின் வெப்பம், கடல் வெப்பம் இரண்டும் அதிகரித்து வருவது அனைவருக்கும் தெரியும். இதனால் அதிகளவில் நீர் ஆவியாகிறது. இதுவும் மழையைப் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஈரப்பதம் அதிகரிப்பதும் தீவிர மழைக்குக் காரணமாக அமைகிறது" என்கிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications