அது என்ன தற்காலிக புயல்.. பெங்கல் புயல் திடீரென தற்காலிக புயல் என்று அறிவிக்கப்பட்டது ஏன்? காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாக இந்தியாவில் ஏற்படும் புயல்கள் அதன் வேகத்தை பொறுத்து வரையறுக்கப்படும். இந்த நிலையில்தான் ஃபெங்கல் புயல் தற்காலிக புயல் என்று வரையறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை முதல் நாளை (நவ.29) காலைக்குள் தற்காலிகப் புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பின் வலுக் குறைந்து நாளை மறுநாள் (நவ.30) காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்ற வானிலை ஆய்வு மையத் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

weather tamilnadu weatherman summer weather news

தற்காலிக புயல் என்றால் என்ன என்று அறியும் முன்.. புயல்கள் வகைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
பொதுவாக இந்தியாவில் ஏற்படும் புயல்களின் முக்கிய வகைகள் வெப்பமண்டல சூறாவளிகள் என்று அழைக்கப்படும். இவை அதன் வேகத்தை பொறுத்து வரையறுக்கப்படுகிறது.

காற்றழுத்த தாழ்வு நிலை: மணிக்கு 31 கிலோமீட்டருக்கும் குறைவான காற்றின் வேகம் (17 நாட்ஸ்) கொண்டவை.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை: காற்றின் வேகம் மணிக்கு 31 முதல் 49 கிலோமீட்டர்கள் (17 முதல் 27 நாட்ஸ்) கொண்டவை.

சூறாவளி புயல்: காற்றின் வேகம் மணிக்கு 62 முதல் 88 கிலோமீட்டர்கள் (34 முதல் 47 நாட்ஸ்) கொண்டவை.

கடுமையான சூறாவளி புயல்: காற்றின் வேகம் மணிக்கு 89 முதல் 118 கிலோமீட்டர்கள் (48 முதல் 63 நாட்ஸ்) கொண்டவை.

மிகக் கடுமையான சூறாவளி புயல்: காற்றின் வேகம் மணிக்கு 119 முதல் 221 கிலோமீட்டர்கள் (64 முதல் 119 நாட்ஸ்)

சூப்பர் சைக்ளோனிக் புயல் - அதி தீவிர புயல்: காற்றின் வேகம் மணிக்கு 221 கிலோமீட்டருக்கு மேல் (119 நாட்ஸ் மற்றும் அதற்கு மேல்) கொண்டவை.

தற்காலிக புயல்: இப்படிப்பட்ட நிலையில்தான் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று மாலை முதல் நாளை (நவ.29) காலைக்குள் தற்காலிகப் புயலாக வலுப்பெறக்கூடும். தற்காலிக புயல் என்றால் 24 மணி நேரத்திற்குள் வலிமை இழக்கும் புயல் ஆகும். அதாவது தாழ்வு மண்டலம்.. புயலாக மாறி 24 மணி நேரத்திற்குள் வலிமை இழந்து பின்னர் கரையை கடந்தால் அது தாற்காலிகப் புயல் ஆகும்.

அதன்படியே பெங்கல் புயல் தற்காலிக புயல் ஆக மாறி உள்ளது. அதன் பின் வலுக் குறைந்து நாளை மறுநாள் (நவ.30) காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்ற வானிலை ஆய்வு மையத் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வெதர்மேன் எச்சரிக்கை: தமிழ்நாட்டில் இன்று பெய்ய உள்ள மழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விடுத்த எச்சரிக்கையை, நான் முன்பே கொடுத்த வானிலை கணிப்புகளில் எந்த மாற்றம் இல்லை. இன்று டெல்டா முதல் சென்னை வரை பகல்/இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யும். பகலில் குளிர்ந்த காற்று அதிகம் வீசும். நன்றாக என்ஜாய் செய்யவும்.

29 முதல் தீவிர மழை தொடங்கி 30ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும். டிசம்பர் 1 மற்றும் 2ல் ஃபுல் எபெக்ட் காரணமாக மழை பெய்யலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+