பிரச்சனையே இனிதான்.. பெங்கல் புயல் நகராமல் இருந்தால், மெதுவாக நகர்ந்தால்.. ஏன் சிக்கல் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் ஃபெங்கல் புயலாக மாறவில்லை. இது மெதுவாக நகர்வது.. அல்லது நகராமல் இருப்பது தான் பெரிய சிக்கலாக மாறும். ஏனென்றால் ஒரு புயல் மெதுவாக நகர்ந்தால் அது மிகப்பெரிய அளவில் பலம் அடையும்.

பொதுவாக புயல் மெதுவாக நகர நகர அதன் வலிமை அதிகரிக்கும். இதை நோக்கி இன்னும் காற்று, ஈரமான மேகங்கள் அதிக அளவில் குறையும். இதன் ஆற்றல் அதிகமாக இருக்கும்.

tamilnadu weatherman summer weather news

இந்த தாழ்வு மையம் நேற்று புயலாக மாறி இருக்க வேண்டும். ஆனால் புயலாக மாறவில்லை. இன்று புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்றும் புயலாக மாறுமா என்பது சந்தேகம்தான். இந்த தாழ்வு மையம் கடுமையாக போக்கு காட்டி வருகிறது.

சென்னையில் இருந்து 480 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இதில் சிக்கல் என்னவென்றால் இந்த தாழ்வு மையம் சமயங்களில் நகராமல் உள்ளது. உதாரணமாக காலை 3 மணிக்கு பிறகு தாழ்வு மையம் நகரவே இல்லை. கடந்த சில மணி நேரங்களாக நகராமல் இருந்த நிலையில் தற்போது மணிக்கு 2 கி.மீ வேகத்தில் மிகவும் மெதுவாக நகர தொடங்கியது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இதுதான் சிக்கலே.. இப்போது இது புயலாக வலிமை அடைவதோடு.. அதி தீவிர புயலாக உருவாகும் வாய்ப்புகளும் உள்ளன. அப்படி நடக்கும் பட்சத்தில் இது அதிக அளவில் மழையை கொடுக்கும். அதோடு புயல் கரையை கடந்த பின் வலிமையான புயல்கள் ஃபுல் எபெக்ட் காரணமாக இன்னும் அதிக மேகத்தை கொண்டு வரும். இதனால் இன்னும் அதிக அளவில் மழை தீவிரம் அடையும்.

இந்த புயல் காரணமாக தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.தெற்கு கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

28.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

29.11.2024: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

30.11.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மற்றும் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

1.12.2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தென்காசி, தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

2.12.2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால்
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மற்றும் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+